உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / சிக்கல் தந்த ஜெய்ஸ்வால் ரன் -அவுட் * இந்திய அணி தடுமாற்றம்

சிக்கல் தந்த ஜெய்ஸ்வால் ரன் -அவுட் * இந்திய அணி தடுமாற்றம்

மெல்போர்ன்: மெல்போர்ன் டெஸ்டில் ஜெய்ஸ்வால் அவசரப்பட்டு 'ரன் அவுட்' ஆனது இந்தியாவுக்கு சிக்கலை ஏற்படுத்தியது. முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு 164 ரன் எடுத்து திணறுகிறது. ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட 'பார்டர் - கவாஸ்கர்' டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் மூன்று போட்டி முடிவில், தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது. நான்காவது டெஸ்ட் (பாக்சிங் டே) மெல்போர்னில் நடக்கிறது. முதல் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட்டுக்கு 311 ரன் எடுத்திருந்தது. ஸ்மித் (68), கம்மின்ஸ் (8) அவுட்டாகாமல் இருந்தனர்.ஸ்மித் சதம்நேற்று இரண்டாவது நாள் ஆட்டம் நடந்தது. ஸ்மித், கம்மின்ஸ் வேகமாக ரன் சேர்த்தனர். 7 வது விக்கெட்டுக்கு 112 ரன் சேர்த்த போது, ஜடேஜா சுழலில் சிக்கினார் கம்மின்ஸ் (49). மறுபக்கம் சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்த ஸ்மித், டெஸ்ட் அரங்கில் 34வது சதம் கடந்தார். இந்நிலையில் பந்தை சுழற்றிய ஜடேஜா, இம்முறை ஸ்டார்க்கை (15) போல்டாக்கினார். ஆகாஷ் தீப் பந்தை எதிர்கொண்ட ஸ்மித், கிரீசை விட்டு இறங்கி வந்து அடித்தார். ஆனால் பந்து பேட்டில் பட்டு பின்னோக்கி உருண்டு சென்று, ஸ்டம்சை தகர்த்தது. இதை தடுக்க முடியாத விரக்தியில் வெளியேறினார் ஸ்மித் (140). கடைசியில் லியானை (13) பும்ரா அவுட்டாக்கினார்.ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 474 ரன் குவித்து ஆல் அவுட்டானது. இந்தியா சார்பில் பும்ரா 4, ஜடேஜா 3, ஆகாஷ் தீப் 2 விக்கெட் சாய்த்தனர். ஜெய்ஸ்வால் அரைசதம்இந்திய அணிக்கு இம்முறை ரோகித், ஜெய்ஸ்வால் ஜோடி துவக்கம் தந்தது. ரோகித் 3 ரன்னுக்கு கம்மின்ஸ் பந்தில் அவுட்டாகினார். ராகுல் 24 ரன் எடுத்து திரும்பினார். இந்தியா 51/2 என திணறியது. அடுத்து ஜெய்ஸ்வால், 'சீனியர்' கோலி இணைந்து போராடினர். ஜெய்ஸ்வால் அரைசதம் அடித்தார். இவருக்கு கோலி 'கம்பெனி' கொடுக்க, இந்திய அணி வலுவான நிலையில் (153/2) இருந்தது. மூன்றாவது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 102 ரன் சேர்த்த போது, ஜெய்ஸ்வால் (82) வீணாக ரன் அவுட்டானார். ஆகாஷ் அதிர்ச்சிபோட்டி முடிய 25 நிமிடம் இருந்த போதும், 'நைட் வாட்ச்மேனாக' ஆகாஷ் தீப் களமிறங்கியது ரசிகர்களுக்கு அதிர்ச்சி தந்தது. 13 பந்து மட்டும் தாக்குப் பிடித்த ஆகாஷ், போலண்ட் பந்தில் 'டக்' அவுட்டானார். இரண்டாவது நாள் முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு 164 ரன் எடுத்து 310 ரன் பின் தங்கி இருந்தது. ரிஷாப் (6), ஜடேஜா (4) அவுட்டாகாமல் இருந்தனர். யார் மீது தவறுபோலண்ட் பந்தை அடித்தார் ஜெய்ஸ்வால். பந்து நேராக கம்மின்ஸ் கைக்கு சென்றது. இதைக் கவனித்த கோலி, ரன் எடுக்கும் முயற்சியை கைவிட்டு, கிரீசிற்குள் திரும்பினார். இதற்குள் அவசரப்பட்ட ஜெய்ஸ்வால், கோலியை நோக்கி ஓடி வந்தார். உடனே, விக்கெட் கீப்பர் பக்கத்தில் உள்ள ஸ்டம்சை நோக்கி எறிந்தார் கம்மின்ஸ். பந்து 'மிஸ்' ஆக, அங்கிருந்த அலெக்ஸ் கேரி, எடுத்து வந்து ரன் அவுட் செய்தார். ஜெய்ஸ்வால் (82) வீணாக அவுட்டானார். இது போட்டியில் திருப்பம் ஏற்படுத்த, அடுத்தடுத்து 2 விக்கெட் சரிந்தன. இதுகுறித்து இந்திய அணி முன்னாள் வீரர் மஞ்ச்ரேக்கர் கூறுகையில்,'' ஜெய்ஸ்வால் ரன் எடுக்க அழைத்ததும் கோலி ஓடியிருக்க வேண்டும்,'' என்றார்.முன்னாள் வீரர் கவாஸ்கர் கூறுகையில்,'' கோலி போன்ற வீரர், ரன் எடுக்க ஓடியிருக்க முடியும். ஆனால் அவர், பீல்டரை பார்த்துக் கொண்டிருந்தார். இதன் பின் திரும்பி, மீண்டும் ஓடுவது என்பது இயலாத செயல். அந்த குறிப்பிட்ட சில வினாடி முடிந்து விடும். அதேநேரம், ஜெய்ஸ்வால் சிறப்பாக விளையாடி ரன் எடுத்துக் கொண்டிருந்தார். இந்த நேரத்தில் ஒரு ரன்னுக்காக 'ரிஸ்க்' எடுத்து ஓடியது தேவையற்றது,'' என்றார்.11 ரன் 3 விக்கெட்இந்திய அணி நேற்று ஒரு கட்டத்தில் 153/2 என இருந்தது. அடுத்து 11 ரன் எடுப்பதற்குள் ஜெய்ஸ்வால், கோலி, ஆகாஷை இழந்து, 165/5 என ஆனது. கைவசம் 5 விக்கெட் மீதமுள்ளன. இன்னும் 111 ரன் எடுத்தால் 'பாலோ ஆன்' அபாயத்தில் இருந்து தப்பலாம். இல்லை எனில், இந்தியா தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சை விளையாடுமாறு, ஆஸ்திரேலியா அணி அழைக்கும். கவாஸ்கர் ஆவேசம்... முறைத்த கோலிகடந்த 2022ல் 'டி-20' உலக கோப்பையில், மெல்போர்னில் நடந்த போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக 82 ரன் விளாசினார் கோலி. அப்போது மைதானத்தில் இருந்த 90,293 ரசிகர்கள் கோலி பெயரை உச்சரித்து பாட்டு பாடினர். இம்முறை நிலைமை அப்படியே தலைகீழானது. முதல் நாளில் கான்ஸ்டாஸ் தோளில் மோதினார் கோலி. இதை கேலி செய்யும் வகையில், 'தி வெஸ்ட் ஆஸ்திரேலியா' என்ற பத்திரிகை ஒன்று, கோலி மூக்கின் மீது பந்தை வைத்து, 'கோமாளி கோலி' என விமர்சித்து இருந்தது. இதுகுறித்து இந்திய ஜாம்பவான் கவாஸ்கர் கூறுகையில்,'' அவர்கள் எப்போதும் இப்படித் தான், அவர்கள் செய்தால் சரி, அதை நாம் செய்தால் அது குற்றம் என்பர்,'' என்றார். * நேற்று இவர் பேட்டிங் களமிறங்கிய போது, ஆஸ்திரேலிய ரசிகர்கள் மீண்டும் கேலி செய்தனர். கோலி அவுட்டாகி திரும்பிய போது, கேலரியில் இருந்த சிலர், அவரை நோக்கி ஏதோ பேசி கேலி செய்தனர். இதனால் கோபமான கோலி, திரும்பி வெளியே வந்து, ரசிகர்களை பார்த்து முறைத்தார். பின் அங்கிருந்த பாதுகாவலர்கள் அவரை உள்ளே அழைத்துச் சென்றனர். ஷேன் வார்னுக்குப் பின்...பெர்த் (5, 3 விக்.,), அடிலெய்டு (4, 0), பிரிஸ்பேன் (6, 3) போட்டியை தொடர்ந்து நேற்று மெல்போர்ன் டெஸ்ட் முதல் இன்னிங்சில் 4 விக்கெட் சாய்த்தார் இந்தியாவின் பும்ரா. இதையடுத்து ஆஸ்திரேலியாவின் ஷேன் வார்னுக்கு (2005, ஆஷஸ் தொடர்) பின், டெஸ்ட் அரங்கில் ஒரு தொடரின், முதல் நான்கு போட்டியின் முதல் இன்னிங்சில், 4 அல்லது அதற்கும் மேல் என விக்கெட் சாய்த்த பவுலர் ஆனார் பும்ரா. * தவிர தொடர்ந்து 84வது முறையாக, ஒரு இன்னிங்சில் 100 ரன்னுக்கும் குறைவான ரன்களை வழங்கி, முதலிடத்தில் நீடிக்கிறார் பும்ரா. இங்கிலாந்தின் மைக் ஹென்றி (54) அடுத்து உள்ளார்.ரசிகர் தொல்லைநேற்று ஆஸ்திரேலியா பேட்டிங் செய்த போது, திடீரென ஒரு ரசிகர் மைதானத்திற்குள் புகுந்தார். அங்கிருந்த கோலி தோளில் கை வைத்து நடந்து சென்றார். பின் நடனம் ஆடினார். அங்கு வந்த பாதுகாவலர்கள் அவரை அப்புறப்படுத்தினர்.இதுகுறித்து பும்ரா மனைவி சஞ்சனா வெளியிட்ட செய்தியில்,' தேசத்தின் சிறந்த பேட்டரை அவமானப்படுத்துகின்றனர். விமர்சனங்களை வரவேற்கலாம். ஆனால் தகாத வார்த்தைகள் பேசுவது எல்லை மீறிய செயல்,'' என்றார்.கருப்பு பட்டை இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் 92, காலமானார். இவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், மெல்போர்ட் டெஸ்ட் இரண்டாவது நாளில் இந்திய வீரர்கள் கருப்பு பட்டை அணிந்து விளையாடினர். ஷேன் வார்னுக்குப் பின்...பெர்த் (5, 3 விக்.,), அடிலெய்டு (4, 0), பிரிஸ்பேன் (6, 3) போட்டியை தொடர்ந்து நேற்று மெல்போர்ன் டெஸ்ட் முதல் இன்னிங்சில் 4 விக்கெட் சாய்த்தார் இந்தியாவின் பும்ரா. இதையடுத்து ஆஸ்திரேலியாவின் ஷேன் வார்னுக்கு (2005, ஆஷஸ் தொடர்) பின், டெஸ்ட் அரங்கில் ஒரு தொடரின், முதல் நான்கு போட்டியின் முதல் இன்னிங்சில், 4 அல்லது அதற்கும் மேல் என விக்கெட் சாய்த்த பவுலர் ஆனார் பும்ரா. 10 வது சதம்'பார்டர்-கவாஸ்கர்' டிராபி தொடரில் அதிக சதம் விளாசிய வீரர் ஆனார் ஸ்மித் (10, ஆஸி.,), கோலி (9), சச்சின் (9) அடுத்து உள்ளனர்.* இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் அரங்கில் அதிக சதம் அடித்தார் ஸ்மித் (11). இங்கிலாந்தின் ஜோ ரூட் (10) 2வதாக உள்ளார்.99 ரன்டெஸ்ட் அரங்கில் ஒரு இன்னிங்சில் அதிக ரன்களை நேற்று விட்டுக் கொடுத்தார் பும்ரா (99 ரன்). இதற்கு முன் 88 ரன் (2020, நியூசி.,) கொடுத்திருந்தார். * தவிர தொடர்ந்து 84வது முறையாக, ஒரு இன்னிங்சில் 100 ரன்னுக்கும் குறைவான ரன்களை வழங்கி, முதலிடத்தில் நீடிக்கிறார் பும்ரா. இங்கிலாந்தின் மைக் ஹென்றி (54) அடுத்து உள்ளார்.201 இன்னிங்ஸ்டெஸ்டில் குறைந்த இன்னிங்சில் (201), 34 வது சதம் அடித்த வீரர்களில் ஸ்மித், 3வது இடம் பிடித்தார். முதல் இரு இடத்தில் சச்சின் (192), பாண்டிங் (193, ஆஸி.,) உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை