உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / சிராஜ்-ஹெட் சமரசம்

சிராஜ்-ஹெட் சமரசம்

அடிலெய்டு: இரண்டாவது இன்னிங்சில் சிராஜ் பந்தில் டிராவிஸ் ஹெட் போல்டானார். உடனே 'வெளியே போ' என ஆவேசமாக சைகை செய்தார். பின் பேட்டி அளித்த ஹெட் 'சிறப்பாக பவுலிங் செய்தீர்கள்' என்று தான் கூறினேன். அதை சிராஜ் தவறாக புரிந்து கொண்டார்,' என்றார். இதை ஏற்க மறுத்த சிராஜ், 'ஹெட் அப்படி சொல்லியிருக்க வாய்ப்பே இல்லை. பொய் சொல்கிறார்' என்றார். இவர்களது பிரச்னையில் தலையிட இரு அணி கேப்டன்கள் ரோகித் சர்மா, கம்மின்ஸ் மறுத்தனர். மூன்றாம் நாள் ஆட்டத்தின் போது இருவரும் சகஜமாக பழகினர். இது குறித்து ஹெட் கூறுகையில்,''என்னை சந்தித்த சிராஜ், தவறான புரிதலே பிரச்னைக்கு காரணம். இதை கடந்து செல்வோம். போட்டியில் கவனம் செலுத்துவோம்,''என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ