மேலும் செய்திகள்
இரானி கோப்பை: விதர்பா சாம்பியன்
3 hour(s) ago
விதர்பா அணி ஆதிக்கம் * இரானி கோப்பையில்...
04-Oct-2025
புதிய கேப்டன் சுப்மன் கில்
03-Oct-2025 | 1
மும்பை: ஐந்து 'டி-20' போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியினர், ஜிம்பாப்வே கிளம்பிச் சென்றனர்.ஜிம்பாப்வே மண்ணில் இந்திய அணி ஐந்து போட்டி கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்கிறது. போட்டிகள் ஜூலை 6, 7, 10, 13, 14ல் ஹராரேயில் நடக்கும். இதற்கான இந்திய அணி கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டார். பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமி தலைவர் லட்சுமண், தற்காலிக பயிற்சியாளராக செயல்பட உள்ளார்.தவிர ஐ.பி.எல்., தொடரில் அசத்திய ரியான் பராக், அபிஷேக் சர்மாவுக்கும் அணியில் இடம் கிடைத்தது. நேற்று தமிழகத்தின் வாஷிங்டன் சுந்தர், தேஷ்பாண்டே, ருதுராஜ் உள்ளிட்ட இந்திய அணி வீரர்கள் ஜிம்பாப்வே கிளம்பிச் சென்றனர்.ஜிம்பாப்வே தொடரில் சேர்க்கப்பட்ட ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன், ஷிவம் துபே என மூவரும், உலக கோப்பை வென்ற அணியில் இருந்தனர். இவர்கள் இந்தியா திரும்புகின்றனர். இதனால் தமிழகத்தின் சாய் சுதர்சன், ஜிதேஷ் சர்மா, ஹர்ஷித் ராணா சேர்க்கப்பட்டனர்.தற்போது லண்டனில் கவுன்டி போட்டியில் விளையாடும் சாய் சுதர்சன் (சர்ரே அணி), உடனடியாக ஜிம்பாப்வே கிளம்பிச் செல்ல உள்ளார்.அணி விபரம்: சுப்சன் கில் (கேப்டன்), ருதுராஜ், அபிஷேக் சர்மா, ரிங்கு சிங், துருவ் ஜோரல், ரியான் பராக், வாஷிங்டன் சுந்தர், பிஷ்னோய், அவேஷ் கான், கலீல் அகமது, முகேஷ் குமார், தேஷ்பாண்டே, சாய் சுதர்சன், ஜிதேஷ் சர்மா, ஹர்ஷித் ராணா.
3 hour(s) ago
04-Oct-2025
03-Oct-2025 | 1