உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / டில்லி அணி மீண்டும் வெற்றி * சரிந்தது லக்னோ பேட்டிங்

டில்லி அணி மீண்டும் வெற்றி * சரிந்தது லக்னோ பேட்டிங்

லக்னோ: பிரிமியர் போட்டியில் டில்லி அணி, 8 விக்கெட்டில் லக்னோவை வீழ்த்தியது. பிரிமியர் கிரிக்கெட்டில் நேற்று லக்னோவில் நடந்த போட்டியில், டில்லி, லக்னோ அணிகள் மீண்டும் மோதின. இத்தொடரில் இரு அணிகள் மோதிய முதல் போட்டியில் டில்லி அணி வெற்றி பெற்றிருந்தது. கடந்த முறை போல, மீண்டும் 'டாஸ்' வென்ற டில்லி அணி கேப்டன் அக்சர் படேல், வழக்கம் போல பீல்டிங் தேர்வு செய்தார். மார்க்ரம் நம்பிக்கைலக்னோ அணிக்கு மார்க்ரம், மிட்சல் மார்ஷ் ஜோடி துவக்கம் கொடுத்தது. ஸ்டார்க் வீசிய இரண்டாவது ஓவரில் மார்க்ரம் சிக்சர் அடித்தார். அடுத்து வந்த முகேஷ் குமார் ஓவரில் தலா ஒரு பவுண்டரி, சிக்சர் விளாசினார் மார்க்ரம். தன் பங்கிற்கு சமீரா பந்தில் ஒரு சிக்சர் அடித்தார் மிட்சல் மார்ஷ். டில்லி அணி 'பவர் பிளே' ஓவரில் 51/0 ரன் எடுத்தது. விப்ராஜ் நிஹாம் வீசிய போட்டியின் 8 வது ஓவரில் தலா ஒரு சிக்சர், பவுண்டரி அடித்த மார்க்ரம், இத்தொடரில் நான்காவது அரைசதம் (30 பந்து) எட்டினார்.சரிந்தது எப்படிலக்னோ அணி 9 ஓவரில் 82/0 ரன் எடுத்தது. இந்நிலையில் சமீரா பந்தில் மார்க்ரம் (52) அவுட்டானார். அடுத்து வந்த நிக்கோலஸ் பூரன், குல்தீப் ஓவரில் தொடர்ச்சியாக இரண்டு பவுண்டரி அடித்தார். பூரனை (9), ஸ்டார்க் போல்டாக்கி அனுப்பி வைத்தார். இதன் பின் அணியின் ரன் வேகம் அப்படியே மந்தமானது.போட்டியின் 14வது ஓவரை வீசிய முகேஷ் குமார், லக்னோ அணிக்கு 'இரட்டை அடி' கொடுத்தார். 2வது பந்தில், அப்துல் சமத் (8 பந்தில் 2 ரன்) முகேஷ் குமாரிடமே 'கேட்ச்' கொடுத்தார். தொடர்ந்து மிரட்டிய இவர், கடைசி பந்தில் மிட்சல் மார்ஷை (45) வெளியேற்றினார்.பின் வந்த படோனி, சமீரா, ஸ்டார்க் பந்துகளை பவுண்டரிக்கு விரட்டிய போதும் ஸ்கோர், பெரியளவு உயரவில்லை. போட்டியின் 20 வது ஓவரை முகேஷ் குமார் வீசினார். இதன் முதல் மூன்று பந்தில் படோனி 'ஹாட்ரிக்' பவுண்டரி அடித்தார். 4வது பந்தில் படோனி (36 ரன், 21 பந்து) அவுட்டானார். அடுத்து வந்த ரிஷாப்பை, கடைசி பந்தில் 'டக்' அவுட்டாக்கினார் முகேஷ் குமார்.லக்னோ அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 159 ரன் மட்டும் எடுத்தது. மில்லர் (14) அவுட்டாகாமல் இருந்தார். டில்லி சார்பில் முகேஷ் குமார் அதிகபட்சம் 4 விக்கெட் சாய்த்தார்.ராகுல் அபாரம்அடுத்து களமிறங்கிய டில்லி அணிக்கு அபிஷேக் போரல், கருண் நாயர் (15) ஜோடி துவக்கம் கொடுத்தது. பின் ராகுல், அபிஷேக் இணைந்து வேகமான ரன் குவிப்பை வெளிப்படுத்தினர். பிஷ்னோய் பந்தை சிக்சருக்கு விரட்டிய அபிஷேக், 34 பந்தில் அரைசதம் எட்டினார். இவர் 51 ரன் எடுத்து, மார்க்ரம் சுழலில் அவுட்டானார். அக்சர் படேல், பிஷ்னோய் பந்துகளில் மாறி மாறி சிக்சர் அடிக்க, வெற்றியை வேகமாக நெருங்கியது டில்லி அணி. கடைசியில் ராகுல் சிக்சர் அடிக்க, டில்லி அணி 17.5 ஓவரில் 161/2 ரன் எடுத்து, மீண்டும் லக்னோவை வீழ்த்தியது. அரைசதம் அடித்த ராகுல் (57), அக்சர் படேல் (34) அவுட்டாகாமல் இருந்தனர்.முதன் முறை...கடந்த சீசனில் அணி உரிமையாளருடன் ஏற்பட்ட மனக் கசப்பு காரணமாக லக்னோ கேப்டன் ராகுல், அணியில் இருந்து வெளியேறினார். ஏலத்தில் டில்லி அணிக்கு சென்றார். விசாகப்பட்டனத்தில் இரு அணிகள் மோதிய போட்டி கடந்த மார்ச் 24ல் நடந்தது. தனிப்பட்ட காரணங்களுக்காக இதில் ராகுல் பங்கேற்கவில்லை. நேற்று முதன் முறையாக, லக்னோ அணியை எதிர்த்து ராகுல் களமிறங்கினார்.இரண்டாவது 'ஸ்பின்னர்'நடப்பு பிரிமியர் தொடரில் 'பவர்பிளே' ஓவருக்குள் (முதல் 6), மூன்று ஓவர்கள் பந்து வீசிய இரண்டாவது ஸ்பின்னர் ஆனார் டில்லி அணியின் அக்சர் படேல். இதற்கு முன் ஐதராபாத் அணிக்கு எதிராக தீக்சனா, இதுபோல பந்து வீசி இருந்தார்.* இதேபோல முதல் 7 ஓவருக்குள் தனது 4 ஓவரை வீசி முடித்த இரண்டாவது ஸ்பின்னர் அக்சர் படேல். இதற்கு முன் 2015ல் ஷாபாஸ் நதீம் 4 ஓவர் வீசி இருந்தார்.ஆறாவது அரைசதம்லக்னோ அணி, நேற்று முதல் 6 ஓவரில் 51/0 ரன் எடுத்தது. இத்தொடரில் 'பவர் பிளே' ஓவருக்குள் ஆறாவது முறையாக (9 போட்டி) இதுபோல 50 அல்லது அதற்கும் மேல் என ரன் எடுத்தது லக்னோ. 5 பந்து, 5 ரன்பிரிமியர் தொடரில் சிக்சர் மழை பொழிகிறார் நிக்கோலஸ் பூரன். ஆனால் டில்லி அணியின் மிட்சல் ஸ்டார்க்கிற்கு எதிராக தொடர்ந்து தடுமாறுகிறார். இவரது 5 பந்தில் ரன் மட்டும் எடுத்த பூரன், மூன்று முறை அவுட்டாகியுள்ளார். தவிர 'டி-20'ல் 6 இன்னிங்சில் 4 முறை பூரனை, ஸ்டார்க் அவுட்டாக்கியுள்ளார்.113 இன்னிங்சிற்குப் பின்...லக்னோ அணி கேப்டன் ரிஷாப் பன்ட், அறிமுக சீசனில் (2016) 2 முறை 7வது வீரராக களமிறங்கினார். அடுத்து 113 இன்னிங்சிற்குப் பின், நேற்று 7வது பேட்டராக வந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை