வாசகர்கள் கருத்துகள் ( 1 )
Good decision, he should have banned for entire matches, his attitude and behavior cannot accepted.
லக்னோ: லக்னோ பவுலர் திக்வேஷ் ரதிக்கு 25 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது. லக்னோ, பஞ்சாப் அணிகள் மோதிய பிரிமியர் போட்டி லக்னோவில் நடந்தது. இதில் பஞ்சாப் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் பஞ்சாப் அணி துவக்க வீரர் பிரியான்ஷ் ஆர்யா, 8 ரன் எடுத்த போது லக்னோ வேகப்பந்து வீச்சாளர் திக்வேஷ் சிங் ரதி பந்தில் (2.5 வது ஓவர்) ஷர்துல் தாகூரிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். அப்போது வேகமாக ஆர்யா அருகில் சென்ற திக்வேஷ், 'கடிதம் எழுதி' அனுப்புவது போல கையால் 'சைகை' செய்தார். கடந்த 2019 ல் இந்தியாவின் கோலியை அவுட்டாக்கிய வெஸ்ட் இண்டீஸ் பவுலர் கெஸ்ரிக் செய்த 'நோட் புக்' கொண்டாட்டம் போல இது இருந்தது.வர்ணனை செய்து கொண்டிருந்த கிரிக்கெட் ஜாம்பவான் கவாஸ்கர், முகமது கைப் உள்ளிட்டோர், திக்வேஷ் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். திக்வேஷ், ஆர்யா என இருவரும் டில்லி அணிக்காக விளையாடுகின்றனர். இவர்கள் நண்பர்கள் தான் என்றாலும், பிரிமியர் கிரிக்கெட் விதிப்படி, இந்திய கிரிக்கெட் போர்டு சார்பில் திக்வேஷிற்கு, போட்டி சம்பளத்தில் 25 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது. தவிர, ஒரு தகுதியிழப்பு வழங்கப்பட்டது.
Good decision, he should have banned for entire matches, his attitude and behavior cannot accepted.