உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / மும்பை அணிக்கு பயிற்சியாளரானார் ஜெயவர்தனே

மும்பை அணிக்கு பயிற்சியாளரானார் ஜெயவர்தனே

மும்பை: ஐ.பி.எல்., மும்பை அணிக்கு தலைமை பயிற்சியாளராக ஜெயவர்தனே மீண்டும் நியமிக்கப்பட்டார்.இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) தொடரில் இடம் பெற்றுள்ள 'ஐந்து முறை சாம்பியன்' மும்பை அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் தென் ஆப்ரிக்க விக்கெட் கீப்பர் பேட்டர் மார்க் பவுச்சர் இருந்தார். இவரது இரண்டு ஆண்டு (2023-24) பதவிக்காலம் முடிந்தது. இந்நிலையில் அடுத்த ஆண்டு நடக்கவுள்ள 18வது சீசனுக்கு புதிய பயிற்சியாளரை நியமிக்க மும்பை அணி நிர்வாகம் முடிவு செய்தது. இதனையடுத்து முன்னாள் இலங்கை கேப்டன் ஜெயவர்தனேவை மீண்டும் பயிற்சியாளராக அறிவித்தது. ஏற்கனவே இவர், 2017 முதல் 2022 வரை மும்பை அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்தார். இவரது பயிற்சியின் கீழ் மும்பை அணி, மூன்று சீசனில் (2017, 2019, 2020) கோப்பை வென்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !