உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / கோல்கட்டா டெஸ்ட்: இந்தியா அதிர்ச்சி தோல்வி

கோல்கட்டா டெஸ்ட்: இந்தியா அதிர்ச்சி தோல்வி

கோல்கட்டா: தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்திய அணி 30 ரன் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியடைந்தது.இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்க அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட், கோல்கட்டாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்தது.முதல் இன்னிங்சில் தென் ஆப்ரிக்கா 159, இந்தியா 189 ரன் எடுத்தன. இரண்டாம் நாள் முடிவில் தென் ஆப்ரிக்க அணி 2வது இன்னிங்சில் 93/7 ரன் எடுத்திருந்தது. மூன்றாம் நாள் ஆட்டத்தில் தென் ஆப்ரிக்க கேப்டன் பவுமா (55) அரைசதம் கடந்து கைகொடுத்தார். தென் ஆப்ரிக்க அணி 2வது இன்னிங்சில் 153 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. இந்தியா சார்பில் ரவிந்திர ஜடேஜா 4 விக்கெட் கைப்பற்றினார்.பின் 124 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 2வது இன்னிங்சில் 93 ரன்னுக்கு சுருண்டு தோல்வியடைந்தது. இந்திய அணிக்கு வாஷிங்டன் சுந்தர் (31), அக்சர் படேல் (26) ஆறுதல் தந்தனர். தென் ஆப்ரிக்கா சார்பில் சைமன் ஹார்மர் 4 விக்கெட் சாய்த்தார்.தென் ஆப்ரிக்க அணி 15 ஆண்டுகளுக்கு பின் இந்திய மண்ணில் டெஸ்ட் வெற்றியை பதிவு செய்தது. கடைசியாக 2010ல் நடந்த நாக்பூர் டெஸ்டில் தென் ஆப்ரிக்க அணி இன்னிங்ஸ், 6 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தென் ஆப்ரிக்கா 1-0 என முன்னிலை பெற்றது. இரண்டாவது டெஸ்ட் வரும் நவ. 22ல் அசாமின் கவுகாத்தியில் துவங்குகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

sasidharan
நவ 17, 2025 13:53

நிச்சயம் ஜெயித்தாக வேண்டிய மேட்ச்சை கோட்டை விட்டு விட்டார்கள் .


Priyan Vadanad
நவ 16, 2025 20:20

ஜடேஜா சுலஜாலம் பும்ரா பூம்ரா என்று ஓவர் பில்டப் கொடுத்தாலும் பெயர் முன்னமே வைக்கக்கூடாது.


Priyan Vadanad
நவ 16, 2025 17:31

இப்படி ஓவரா பில்டப் பண்ணியே இந்திய அணி கவுந்து போச்சு.


முக்கிய வீடியோ