உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / நலமாக உள்ளார் லுங்கி நிகிடி

நலமாக உள்ளார் லுங்கி நிகிடி

புதுடில்லி: டில்லியில் நடந்த லீக் போட்டியில் பஞ்சாப் அணி, டில்லியை வீழ்த்தியது. இதில், பஞ்சாப் அணியின் பிரியான்ஷ் அடித்த பந்தை பிடிக்க பின்னோக்கி ஓடிய டில்லி வீரர் லுங்கி நிகிடி (தென் ஆப்ரிக்கா) தடுமாறி கீழே விழுந்தார். அப்போது தலையின் பின்பகுதியில் காயம் ஏற்பட வலியால் துடித்தார். மைதானத்திற்கே 'ஆம்புலன்ஸ்' வரவழைக்கப்பட்டது.'ஸ்டிரெச்சர்' உதவியுடன் நிகிடியை, அருகில் உள்ள மேக்ஸ் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். 'ஸ்கேன்' பரிசோதனையில் பாதிப்பு எதுவும் இல்லை என உறுதியானது. இதையடுத்து 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்ட இவர், டில்லியில் தங்கியுள்ள ஓட்டல் அறைக்கு திரும்பினார்.நிகிடி வெளியிட்ட செய்தியில்,'நலமாக இருக்கிறேன். எனது உடல்நிலை பற்றி அக்கறையுடன் விசாரித்த அனைவருக்கும் நன்றி,' என தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !