மார்க் உட் காயம்
லண்டன்: இங்கிலாந்தின் மார்க் உட், முழங்கால் காயத்தால் 4 மாதங்களுக்கு எவ்வித போட்டியிலும் விளையாடமாட்டார்.இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் மார்க் உட் 35. சமீபத்தில் லாகூரில் நடந்த ஆப்கானிஸ்தானுக்கு எதிரான சாம்பியன்ஸ் டிராபி லீக் போட்டியில் போது இடது முழங்காலில் காயமடைந்தார். 'ஸ்கேன்' செய்து பார்த்ததில் 'ஆப்பரேஷன்' செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார். விரைவில் 'ஆப்பரேஷன்' செய்யவுள்ள இவர், அடுத்த நான்கு மாதங்களுக்கு அனைத்துவித போட்டிகளில் இருந்து விலகினார். இதனால் சொந்த மண்ணில் நடக்கும் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மார்க் உட் பங்கேற்பது சந்தேகம்.மார்க் உட் கூறுகையில், ''முழங்கால் காயத்தால் எவ்வித போட்டிகளிலும் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. விரைவில் 'ஆப்பரேஷன்' செய்ய உள்ளேன். இதிலிருந்து மீண்டு, முழு உடற்தகுதியுடன் போட்டிக்கு திரும்புவேன்,'' என்றார்.