உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / ஆஸ்திரேலியாவிடம் வீழ்ந்தது பாகிஸ்தான்: முதல் ஒருநாள் போட்டியில்

ஆஸ்திரேலியாவிடம் வீழ்ந்தது பாகிஸ்தான்: முதல் ஒருநாள் போட்டியில்

மெல்போர்ன்: பாகிஸ்தானுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.ஆஸ்திரேலியா சென்றுள்ள பாகிஸ்தான் அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. மெல்போர்னில் முதல் போட்டி நடந்தது. 'டாஸ்' வென்ற ஆஸ்திரேலிய அணி 'பீல்டிங்' தேர்வு செய்தது.பாகிஸ்தான் அணிக்கு பாபர் ஆசம் (37), கேப்டன் முகமது ரிஸ்வான் (44), நசீம் ஷா (40) கைகொடுத்தனர். இர்பான் கான் (22), ஷாஹீன் அப்ரிதி (24) ஆறுதல் தந்தனர். பாகிஸ்தான் அணி 46.4 ஓவரில் 203 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. ஆஸ்திரேலியா சார்பில் ஸ்டார்க் 3, கம்மின்ஸ், ஜாம்பா தலா 2 விக்கெட் சாய்த்தனர்.சுலப இலக்கை விரட்டிய ஆஸ்திரேலிய அணிக்கு ஸ்டீவ் ஸ்மித் (44), ஜோஷ் இங்லிஸ் (49) நம்பிக்கை தந்தனர். லபுசேன் (16), ஆரோன் ஹார்டி (10), மேக்ஸ்வெல் (0) சோபிக்கவில்லை. பொறுப்பாக ஆடிய கேப்டன் கம்மின்ஸ் (32*) அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். ஆஸ்திரேலிய அணி 33.3 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 204 ரன் எடுத்து வெற்றி பெற்றது.

71 வெற்றி

ஒருநாள் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக அதிக வெற்றி பெற்ற அணிகளுக்கான பட்டியலில் முதலிடத்தை வெஸ்ட் இண்டீசுடன் பகிர்ந்து கொண்டது ஆஸ்திரேலியா. இரு அணிகளும் தலா 71 போட்டியில் வெற்றி பெற்றன. அடுத்த மூன்று இடங்களில் இலங்கை (59), இங்கிலாந்து (57), இந்தியா (57) உள்ளன.ஸ்டார்க் சாதனை'வேகத்தில்' மிரட்டிய ஸ்டார்க், சொந்த மண்ணில் ஒருநாள் போட்டியில் குறைந்த இன்னிங்சில் (54) 100 விக்கெட் சாய்த்த ஆஸ்திரேலிய பவுலரானார். இதுவரை 54 போட்டியில், 102 விக்கெட் கைப்பற்றி உள்ளார். இதற்கு முன், பிரட் லீ, 55 இன்னிங்சில் இம்மைல்கல்லை எட்டியிருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை