உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / வரலாறு படைத்தது வங்கதேசம் * பாகிஸ்தானை வீழ்த்தி அசத்தல்

வரலாறு படைத்தது வங்கதேசம் * பாகிஸ்தானை வீழ்த்தி அசத்தல்

ராவல்பிண்டி: டெஸ்ட் கிரிக்கெட்டில் பாகிஸ்தானை சாய்த்து, கோப்பை வென்று வரலாறு படைத்தது வங்கதேச அணி. பாகிஸ்தான், வங்கதேசம் அணிகள் மோதிய இரண்டாவது டெஸ்ட் ராவல்பிண்டியில் நடந்தது. முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் 274, வங்கதேசம் 262 ரன் எடுத்தன. இரண்டாவது இன்னிங்சில் பாகிஸ்தான் அணி 172 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. பின் 185 ரன் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய வங்கதேச அணி, நான்காவது நாள் முடிவில் இரண்டாவது இன்னிங்சில் விக்கெட் இழப்பின்றி 42 ரன் எடுத்திருந்தது. ஜாகிர் ஹசன் (31), ஷாத்மன் (9) அவுட்டாகாமல் இருந்தனர். சபாஷ் பேட்டர்இன்று ஐந்தாவது, கடைசி நாள் ஆட்டம் நடந்தது. கூடுதலாக 143 ரன் எடுத்தால் கோப்பை வெல்லலாம் என்ற நிலையில் வங்கதேச அணியின் 'டாப் ஆர்டர்' பேட்டர்கள் சிறப்பாக செயல்பட்டனர். ஜாகிர் ஹசன் (40), ஷாத்மன் (24) அவுட்டானது போதும், கேப்டன் நஜ்முல் ஷாண்டோ, 38 ரன் எடுத்து கைகொடுக்க, வங்கதேசம் வெற்றியை நெருங்கியது.மோமினுல் 34 ரன் எடுத்து அவுட்டானார். பின் இணைந்த 'சீனியர்' வீரர்கள் முஷ்பிகுர் ரகிம், சாகிப் அல் ஹசன் அவுட்டாகாமல் இருந்து அணியை வெற்றிக்கு கொண்டு சென்றனர். வங்கதேச அணி இரண்டாவது இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கு 184 ரன் எடுத்தது. 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வங்கதேச அணி, டெஸ்ட் வரலாற்றில் முதன் முறையாக பாகிஸ்தானுக்கு எதிரான தொடரை கைப்பற்றி (2-0) கோப்பை தட்டிச் சென்றது. முஷ்பிகுர் ரகிம் (22), சாகிப் அல் ஹசன் (21) அவுட்டாகாமல் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை