| ADDED : மார் 15, 2024 09:48 PM
மும்பை: ''இந்தியாவுக்காக டெஸ்ட் போட்டியில் விளையாட விரும்புகிறேன்,'' என, முஷீர் கான் தெரிவித்துள்ளார்.இந்திய வீரர் சர்பராஸ் கான் 26, சகோதரர் முஷீர் கான் 19. கூச் பெஹார் டிராபி (670 ரன், 32 விக்கெட், 2022) அசத்திய இவர், 2022ல் ரஞ்சி கோப்பையில் மும்பை அணியில் அறிமுகமானார். தென் ஆப்ரிக்காவில் நடந்த ஜூனியர் உலக கோப்பையில் இந்தியா 'ஏ' அணிக்கு (360 ரன், 7 விக்கெட்) நம்பிக்கை தந்தார்.சமீபத்தில் விதர்பா அணிக்கு எதிராக 136 ரன் விளாசிய முஷீர் கான், ரஞ்சி கோப்பை பைனலில் சதம் விளாசிய இளம் மும்பை வீரரானார். இத்தொடரில் 'நாக் அவுட்' போட்டியில் (3) மட்டும் விளையாடிய முஷீர் கான், 433 ரன் (2 சதம்) எடுத்து, 5 விக்கெட் கைப்பற்றினார். 17வது ஐ.பி.எல்., சீசனுக்கான ஏலத்தில் இவரை எந்த ஒரு அணியும் வாங்கவில்லை.முஷீர் கான் கூறுகையில், ''எனது தந்தையின் விருப்பப்படி டெஸ்ட் அணியில் இடம் பெற முயற்சிப்பேன். இந்தியாவுக்காக நிறைய டெஸ்டில் விளையாட வேண்டும். மற்றபடி ஐ.பி.எல்., ஏலத்தில் விலை போகாதது வருத்தம் இல்லை. அடுத்த ஆண்டு வாய்ப்பு கிடைக்கும் என நம்புகிறேன். இதற்கேற்ப 'டி-20' போட்டிக்கு என்னை தயார் படுத்திக் கொள்வேன்,'' என்றார்.