உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / ரஞ்சி: தமிழக பவுலர்கள் தடுமாற்றம்

ரஞ்சி: தமிழக பவுலர்கள் தடுமாற்றம்

கோவை: ரஞ்சி கோப்பை லீக் போட்டியில் தமிழக பவுலர்கள் தடுமாறினர்.கோவை, ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை, அறிவியல் கல்லுாரி மைதானத்தில் நடக்கும் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் 'ஏ' பிரிவு லீக் போட்டியில் தமிழகம், 'நடப்பு சாம்பியன்' விதர்பா அணிகள் விளையாடுகின்றன. முதல் நாள் முடிவில் தமிழக அணி முதல் இன்னிங்சில் 252/4 ரன் எடுத்திருந்தது. இந்திரஜித் (94) அவுட்டாகாமல் இருந்தார்.இரண்டாம் நாள் ஆட்டத்தில் பாபா இந்திரஜித் 96 ரன்னில் ஆட்டமிழந்தார். ஷாருக்கான் (17), முகமது அலி (14), கேப்டன் சாய் கிஷோர் (1) சோபிக்கவில்லை. தமிழக அணி முதல் இன்னிங்சில் 291 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது.பின் முதல் இன்னிங்சை துவக்கிய விதர்பா அணிக்கு சத்யம் போயர் (11) ஏமாற்றினார். பின் இணைந்த அமன் மொகாதே, துருவ் ஷோரே ஜோடி நம்பிக்கை தந்தது. இருவரும் அரைசதம் கடந்தனர். இவர்களை பிரிக்க முடியாமல் தமிழக பவுலர்கள் தடுமாறினர். இரண்டாவது விக்கெட்டுக்கு 123 ரன் சேர்த்த போது சாய் கிஷோர் பந்தில் அமன் (80) அவுட்டானார்.ஆட்டநேர முடிவில் விதர்பா அணி முதல் இன்னிங்சில் 211/2 ரன் எடுத்திருந்தது. ஷோரே (80), ரவிகுமார் சமர்த் (24) அவுட்டாகாமல் இருந்தனர். தமிழகம் சார்பில் சாய் கிஷோர் 2 விக்கெட் கைப்பற்றினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

arvindhan shanmugam aravindan
நவ 03, 2025 20:28

முதல்வர் அவர்கள் கவனத்திற்கு கொண்டு சென்று உடனே நடவடிக்கை எடுப்பார்கள் மருத்துவர்களின் நீண்ட கால முறையீடு நிறைவேற்றப்படும் என நம்பலாம்


சமீபத்திய செய்தி