உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / ரிஷாப் பன்ட்டிற்கு அபராதம்

ரிஷாப் பன்ட்டிற்கு அபராதம்

லக்னோ: லக்னோவில் நடந்த பிரிமியர் லீக் போட்டியில் லக்னோ அணி, மும்பையை வீழ்த்தியது. லக்னோ அணி குறிப்பிட்ட நேரத்திற்குள் (90 நிமிடத்தில், 20 ஓவர்) பந்துவீச தவறியது. இதனையடுத்து லக்னோ அணி கேப்டன் ரிஷாப் பன்ட்டிற்கு, போட்டி சம்பளத்தில் இருந்து ரூ. 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.திக்வேஷ் அபராதம்: இப்போட்டியில் மும்பை அணியின் நமனை வெளியேற்றிய லக்னோ வீரர் திக்வேஷ் ரதி, வித்தியாசமான முறையில் ('நோட்புக் டிக்') கொண்டாடினார். போட்டியில் எதிரணி வீரரை இழிவுபடுத்தும் விதமாக சைகை செய்வது தவறு என்பதால், திக்வேஷ் ரதிக்கு போட்டி சம்பளத்தில் இருந்து 50 சதவீதம் அபராதம், இரண்டு தகுதி இழப்பு புள்ளி வழங்கப்பட்டது.ஏற்கனவே பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் பிரியான்ஷ் ஆர்யாவை அவுட்டாக்கிய திக்வேஷ் ரதி, இதுபோல கொண்டாடினார். இதனால் இவருக்கு போட்டி சம்பளத்தில் இருந்து 25 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டு, ஒரு தகுதி இழப்பு புள்ளி வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை