உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / ரோகித் சர்மா கேப்டன்: ஐ.சி.சி., டி-20 அணிக்கு

ரோகித் சர்மா கேப்டன்: ஐ.சி.சி., டி-20 அணிக்கு

துபாய்: ஐ.சி.சி., சிறந்த 'டி-20' அணிக்கு (2024) இந்தியாவின் ரோகித் சர்மா கேப்டனாக அறிவிக்கப்பட்டார்.கடந்த ஆண்டு டெஸ்ட், ஒருநாள், 'டி--20' போட்டிகளில் சிறப்பாக விளையாடிய வீரர், வீராங்கனைகளை தேர்வு செய்து சிறந்த 'லெவன்' அணிகளை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) வெளியிட்டது.இதன்படி வீரர்களுக்கான சிறந்த 'டி-20' அணி வெளியானது. இந்தியா சார்பில் ரோகித் சர்மா, ஹர்திக் பாண்ட்யா, ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங் என 4 பேர் இடம் பெற்றுள்ளனர். இதில் ரோகித் கேப்டனாக அறிவிக்கப்பட்டார். கடந்த ஆண்டு 11 'டி-20' போட்டியில், 378 ரன் குவித்த ரோகித், இந்திய அணிக்கு 'டி-20' உலக கோப்பை பெற்றுத்தந்தார்.கடந்த ஆண்டு 'ஆல்-ரவுண்டராக' அசத்திய (17 போட்டியில், 352 ரன், 16 விக்கெட்) ஹர்திக் பாண்ட்யா, ஐ.சி.சி., 'ஆல்-ரவுண்டர்' தரவரிசையில் 'நம்பர்-1' இடம் பிடித்தார். தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான 'டி-20' உலக கோப்பை பைனலில் கடைசி ஓவரை துல்லியமாக வீசிய இவர், வெற்றிக்கு கைகொடுத்தார்.வேகப்பந்துவீச்சில் மிரட்டிய பும்ரா, கடந்த ஆண்டு 8 போட்டியில், 15 விக்கெட் சாய்த்தார். இளம் வேகப்பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங், 18 போட்டியில், 36 விக்கெட் கைப்பற்றினார்.இந்த அணியில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே, ஆப்கானிஸ்தான், இலங்கை சார்பில் தலா ஒரு வீரர் இடம் பெற்றுள்ளனர். நியூசிலாந்து, தென் ஆப்ரிக்கா, வங்கதேசம் சார்பில் ஒரு வீரர் கூட இடம் பெறவில்லை.'டி-20' அணி: ரோகித் (கேப்டன்), ஹர்திக் பாண்ட்யா, பும்ரா, அர்ஷ்தீப் (இந்தியா), டிராவிஸ் ஹெட் (ஆஸி.,), பில் சால்ட் (இங்கிலாந்து), பாபர் ஆசம் (பாக்.,), நிக்கோலஸ் பூரன் (வெ.இண்டீஸ்), சிக்கந்தர் ராஜா (ஜிம்பாப்வே), ரஷித் கான் (ஆப்கன்), வணிந்து ஹசரங்கா (இலங்கை).

சிறந்த வீரர் அர்ஷ்தீப்

கடந்த ஆண்டின் சிறந்த 'டி-20' வீரருக்கான ஐ.சி.சி., விருதுக்கு இந்தியாவின் அர்ஷ்தீப் சிங், பாகிஸ்தானின் பாபர் ஆசம், ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட், ஜிம்பாப்வேயின் சிக்கந்தர் ராஜா பரிந்துரைக்கப்பட்டனர். இதில் சிறந்த 'டி-20' வீரராக அர்ஷ்தீப் தேர்வானார். இதன்மூலம் இவ்விருது வென்ற 2வது இந்திய வீரர் ஆனார். ஏற்கனவே சூர்யகுமார் யாதவ் இரண்டு முறை (2022, 2023) இவ்விருது வென்றிருந்தார்.மந்தனா, தீப்தி தேர்வுவீராங்கனைகளுக்கான ஐ.சி.சி., சிறந்த 'டி-20' அணிக்கு இந்தியா சார்பில் ஸ்மிருதி மந்தனா, ரிச்சா கோஷ், தீப்தி சர்மா என 3 பேர் தேர்வாகினர். இந்த அணியில் தென் ஆப்ரிக்கா சார்பில் 2, இலங்கை, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, அயர்லாந்து, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் சார்பில் தலா ஒரு வீராங்கனை இடம் பெற்றுள்ளனர். கேப்டனாக தென் ஆப்ரிக்காவின் லாரா வோல்வார்ட் அறிவிக்கப்பட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை