உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / லெஜண்ட்ஸ் தொடரில் தவான்

லெஜண்ட்ஸ் தொடரில் தவான்

புதுடில்லி: சர்வதேச அரங்கில் இருந்து விடைபெற்ற ஷிகர் தவான், 'லெஜண்ட்ஸ் லீக்' கிரிக்கெட் தொடரில் பங்கேற்க உள்ளார்.இந்தியாவில் 'லெஜண்ட்ஸ் லீக்' கிரிக்கெட் தொடர் நடத்தப்படுகிறது. சர்வதேச அரங்கில் ஓய்வு பெற்ற வீரர்கள் பங்கேற்கும் இத்தொடரின் முதல் இரு சீசனில் இந்தியா கேபிடல்ஸ், மணிப்பால் டைகர்ஸ் அணிகள் சாம்பியன் ஆகின. இதன் மூன்றாவது சீசன் வரும் செப்டம்பர் மாதம் துவங்க உள்ளது. இதில் பங்கேற்க உள்ளார் ஷிகர் தவான் 38. சமீபத்தில் அனைத்து வித கிரிக்கெட்டில் இருந்தும் இவர் ஓய்வு அறிவித்து இருந்தார். இதுகுறித்து தவான் கூறுகையில், ''என்னையும் கிரிக்கெட்டினையும் பிரிப்பது எளிதல்ல. தொடர்ந்து போட்டிகளில் பங்கேற்கும் வகையில் உடற்தகுதியுடன் உள்ளேன். எனது நண்பர்களுடன் மீண்டும் இணைந்து விளையாட ஆர்வமாக உள்ளேன்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை