உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / சுப்மன் கில், பாண்ட்யா தேர்வு: இந்திய டி-20 அணி அறிவிப்பு

சுப்மன் கில், பாண்ட்யா தேர்வு: இந்திய டி-20 அணி அறிவிப்பு

ராய்ப்பூர்: தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான 'டி-20' தொடரில் பங்கேற்கும் இந்திய அணிக்கு சுப்மன் கில், ஹர்திக் பாண்ட்யா தேர்வாகினர்.இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்க அணி, ஐந்து போட்டிகள் கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி வரும் டிச. 9ல் கட்டாக்கில் நடக்கவுள்ளது. மீதமுள்ள போட்டிகள் நியூ சண்டிகர் (டிச. 11), தர்மசாலா (டிச. 14), லக்னோ (டிச. 17), ஆமதாபாத்தில் (டிச. 19) நடக்கவுள்ளன. இத்தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது.இதில் 'ஆல்-ரவுண்டர்' ஹர்திக் பாண்ட்யா 32, டெஸ்ட், ஒருநாள் அணி கேப்டன் சுப்மன் கில் 26, இடம் பெற்றுள்ளனர். சமீபத்திய கோல்கட்டா டெஸ்டில் கழுத்து பகுதியில் காயமடைந்த சுப்மன் கில், தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு தேர்வு செய்யப்படவில்லை. காயத்தில் இருந்து மீண்டு வரும் இவர், 'டி-20' அணிக்கு துணை கேப்டனாக அறிவிக்கப்பட்ட போதும், காயத்தின் தன்மையை பொறுத்து 'லெவன்' அணியில் இடம் பெறுவார்.சமீபத்தில் ஐதராபாத்தில் நடந்த பஞ்சாப் அணிக்கு எதிரான சையது முஷ்தாக் அலி டிராபியில், பரோடா அணி சார்பில் பங்கேற்று 77 ரன் எடுத்த ஹர்திக் பாண்ட்யா, 'டி-20' அணிக்கு திரும்பினார்.இந்திய அணி: சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), சுப்மன் கில் (துணை கேப்டன்), அபிஷேக் சர்மா, திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா, அக்சர் படேல், ஜிதேஷ் சர்மா, சஞ்சு சாம்சன், ஜஸ்பிரித் பும்ரா, வருண் சக்ரவர்த்தி, அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், ஹர்ஷித் ராணா, வாஷிங்டன் சுந்தர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி