உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / தென் ஆப்ரிக்க அணி அபாரம்: கைல் வெர்ரின்னே சதம்

தென் ஆப்ரிக்க அணி அபாரம்: கைல் வெர்ரின்னே சதம்

கெபேஹா: கைல் வெர்ரின்னே சதம் கடந்து கைகொடுக்க தென் ஆப்ரிக்க அணி முதல் இன்னிங்சில் 358 ரன் குவித்தது.தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இலங்கை அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் தென் ஆப்ரிக்கா வென்றது. இரண்டாவது டெஸ்ட் கெபேஹா நகரில் நடக்கிறது. முதல் நாள் முடிவில் தென் ஆப்ரிக்க அணி முதல் இன்னிங்சில் 269/7 ரன் எடுத்திருந்தது.இரண்டாம் நாள் ஆட்டம் நடந்தது. ரபாடா (23) ஆறுதல் தந்தார். கைல் வெர்ரின்னே சதம் விளாசினார். தென் ஆப்ரிக்க அணி முதல் இன்னிங்சில் 358 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. வெர்ரின்னே (105) அவுட்டாகாமல் இருந்தார். இலங்கை சார்பில் லகிரு குமாரா 4, அசிதா பெர்ணான்டோ 3 விக்கெட் வீழ்த்தினர்.பின் முதல் இன்னிங்சை துவக்கிய இலங்கை அணிக்கு திமுத் கருணாரத்னே (20), சண்டிமால் (44) ஓரளவு கைகொடுத்தனர். பதும் நிசங்கா (89) அரைசதம் கடந்தார்.ஆட்டநேர முடிவில் இலங்கை அணி முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கு 242 ரன் எடுத்திருந்தது. மாத்யூஸ் (40), கமிந்து மெண்டிஸ் (30) அவுட்டாகாமல் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை