உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / தொடரை வென்றது வெஸ்ட் இண்டீஸ் * கோட்டைவிட்ட தென் ஆப்ரிக்கா

தொடரை வென்றது வெஸ்ட் இண்டீஸ் * கோட்டைவிட்ட தென் ஆப்ரிக்கா

தரவுபா: இரண்டாவது 'டி-20' போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி, 30 ரன் வித்தியாசத்தில் வென்றது.வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள தென் ஆப்ரிக்க அணி, மூன்று போட்டிகள் கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்றது. நேற்று தரவுபாவில் இரண்டாவது போட்டி நடந்தது. 'டாஸ்' வென்ற தென் ஆப்ரிக்க அணி 'பீல்டிங்' தேர்வு செய்தது.ஹோப் 'நம்பிக்கை'வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதானஸ் (28), ஷாய் ஹோப் (41) ஜோடி நல்ல துவக்கம் தந்தது. பூரன் (19), சேஸ் (7) நிலைக்கவில்லை. கேப்டன் ராவ்மென் பாவெல் (35), ரூதர்போர்டு (29) அணியின் ஸ்கோரை உயர்த்தினர். வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவரில் 179/6 ரன் எடுத்தது. திடீர் சரிவுதென் ஆப்ரிக்க அணிக்கு ரியான் (20), ஹென்ரிக்ஸ் (44) ஜோடி 4.4 ஓவரில் 63 ரன் சேர்த்தது. கேப்டன் மார்க்ரம் (19) அவுட்டான போதும், 13.4 ஓவரில் 129/3 என வலுவாக இருந்தது. கைவசம் 7 விக்கெட் இருக்க, அடுத்த 38 பந்தில் 51 ரன் மட்டும் தேவைப்பட்டன. திடீரென அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது தென் ஆப்ரிக்கா. ஸ்டப்ஸ் (28), துசென் (17) தவிர மற்றவர்கள் ஒற்றை இலக்கத்தை தாண்டவில்லை. கூடுதலாக 20 எடுப்பதற்குள் 7 விக்கெட்டுகளை இழந்தது தென் ஆப்ரிக்க அணி. 19.4 ஓவரில் 149 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி தோற்றது. வெஸ்ட் இண்டீஸ் அணி 2-0 என தொடரை வென்றது. ரொமாரியோ, ஜோசப் தலா 3 விக்கெட் சாய்த்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை