மேலும் செய்திகள்
ஆஸ்திரேலிய அணி இன்னிங்ஸ் வெற்றி: இலங்கை ஏமாற்றம்
01-Feb-2025
கொழும்பு: இரண்டாவது ஒருநாள் போட்டியில் அசத்திய இலங்கை அணி 174 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. தொடரை 2-0 எனக் கைப்பற்றி கோப்பை வென்றது.இலங்கை சென்ற ஆஸ்திரேலிய அணி, இரண்டு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றது. முதல் போட்டியில் இலங்கை வென்றது. 2வது போட்டி கொழும்புவில் நடந்தது.'டாஸ்' வென்று முதலில் 'பேட்' செய்த இலங்கை அணிக்கு பதும் நிசங்கா (6) ஏமாற்றினார். பின் இணைந்த நிஷான் மதுஷ்கா, குசால் மெண்டிஸ் ஜோடி நம்பிக்கை தந்தது. மதுஷ்கா அரைசதம் கடந்தார். இரண்டாவது விக்கெட்டுக்கு 98 ரன் சேர்த்த போது மதுஷ்கா (51) அவுட்டானார். கமிந்து மெண்டிஸ் (1) சோபிக்கவில்லை. அபாரமாக ஆடிய குசால் மெண்டிஸ் (101) சதம் விளாசினார். பொறுப்பாக ஆடிய கேப்டன் சரித் அசலங்கா, தன்பங்கிற்கு அரைசதம் கடந்தார்.இலங்கை அணி 50 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 281 ரன் எடுத்தது. அசலங்கா (78), ஜனித் லியனகே (32) அவுட்டாகாமல் இருந்தனர்.சவாலான இலக்கை விரட்டிய ஆஸ்திரேலிய அணிக்கு கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் (28), ஜோஷ் இங்லிஸ் (22), டிராவிஸ் ஹெட் (18) ஆறுதல் தந்தனர். மற்றவர்கள் ஏமாற்ற ஆஸ்திரேலிய அணி 24.2 ஓவரில் 107 ரன்னுக்கு சுருண்டு தோல்வியடைந்தது. இலங்கை சார்பில் துனித் வெல்லாலகே 4, அசிதா பெர்ணான்டோ, வணிந்து ஹசரங்கா தலா 3 விக்கெட் சாய்த்தனர்.ஆட்ட நாயகன் விருதை குசால் மெண்டிஸ் (இலங்கை) வென்றார். தொடர் நாயகன் விருதை இலங்கை கேப்டன் சரித் அசலங்கா (205 ரன், ஒரு விக்கெட்) கைப்பற்றினார்.
01-Feb-2025