உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / நியூசிலாந்தை வென்றது இலங்கை: அவிஷ்கா, குசால் மெண்டிஸ் சதம்

நியூசிலாந்தை வென்றது இலங்கை: அவிஷ்கா, குசால் மெண்டிஸ் சதம்

தம்புலா: அவிஷ்கா, குசால் மெண்டிஸ் சதம் விளாச இலங்கை அணி 45 ரன் வித்தியாசத்தில் 'டக்வொர்த் லீவிஸ்' முறையில் நியூசிலாந்தை வென்றது.இலங்கை சென்றுள்ள நியூசிலாந்து அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி தம்புலாவில் நடந்தது. 'டாஸ்' வென்று முதலில் 'பேட்' செய்த இலங்கை அணிக்கு அவிஷ்கா பெர்ணான்டோ (100), குசால் மெண்டிஸ் (143) ஜோடி நம்பிக்கை தந்தது. கேப்டன் சரித் அசலங்கா (40) ஓரளவு கைகொடுத்தார். இலங்கை அணி 49.2 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 324 ரன் எடுத்த போது மழை குறுக்கிட போட்டி நிறுத்தப்பட்டது.மழை நின்ற பின், 'டக்வொர்த் லீவிஸ்' முறையில் நியூசிலாந்தின் வெற்றிக்கு 27 ஓவரில், 221 ரன் என இலக்கு மாற்றப்பட்டது. வில் யங் (48), டிம் ராபின்சன் (35) நல்ல துவக்கம் கொடுத்தனர். நிக்கோல்ஸ் (6), சாப்மன் (2), பிலிப்ஸ் (9) ஏமாற்றினர். நியூசிலாந்து அணி 27 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 175 ரன் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. பிரேஸ்வெல் (34) அவுட்டாகாமல் இருந்தார். இலங்கை சார்பில் தில்ஷன் மதுஷங்கா 3 விக்கெட் சாய்த்தார்.ஆட்ட நாயகன் விருதை குசால் மெண்டிஸ் வென்றார். இலங்கை அணி 1-0 என முன்னிலையில் உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி