உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / இலங்கை அணி வெற்றி: வெஸ்ட் இண்டீசை வீழ்த்தியது

இலங்கை அணி வெற்றி: வெஸ்ட் இண்டீசை வீழ்த்தியது

பல்லேகெலே: வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் 'டக்வொர்த் லீவிஸ்' முறையில் வெற்றி பெற்றது.இலங்கை சென்றுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி பல்லேகெலேயில் நடந்தது. 'டாஸ்' வென்று முதலில் 'பேட்' செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 38.3 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 185 ரன் எடுத்திருந்த போது மழையால் போட்டி நிறுத்திவைக்கப்பட்டது. ஷெர்பேன் ரூதர்போர்டு (74*), ராஸ்டன் சேஸ் (33*) அவுட்டாகாமல் இருந்தனர்.மழை நின்ற பின், 'டக்வொர்த் லீவிஸ்' முறையில் இலங்கையின் வெற்றிக்கு 37 ஓவரில் 232 ரன் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. சவாலான இலக்கை விரட்டிய இலங்கை அணிக்கு நிஷான் மதுஷ்கா (69), கேப்டன் சரித் அசலங்கா (77) கைகொடுக்க, 31.5 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 234 ரன் எடுத்து வெற்றி பெற்றது. ஆட்ட நாயகன் விருதை சரித் அசலங்கா வென்றார். இலங்கை அணி 1-0 என முன்னிலை பெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ