உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / இலங்கை அணி முன்னிலை: கருணாரத்னே, சண்டிமால் அரைசதம்

இலங்கை அணி முன்னிலை: கருணாரத்னே, சண்டிமால் அரைசதம்

காலே: கருணாரத்னே, சண்டிமால் அரைசதம் கடந்து கைகொடுக்க இலங்கை அணி முன்னிலை பெற்றது.இலங்கை, நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் காலேயில் நடக்கிறது. இலங்கை அணி முதல் இன்னிங்சில் 305 ரன் எடுத்தது. இரண்டாம் நாள் முடிவில் நியூசிலாந்து அணி 255/4 ரன் எடுத்திருந்தது.இரண்டாம் நாள் ஆட்டத்தில் டேரில் மிட்செல் (57), பிலிப்ஸ் (49*), பிளன்டெல் (25) கைகொடுத்தனர். நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 340 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. இலங்கை சார்பில் பிரபாத் ஜெயசூர்யா 4, ரமேஷ் மெண்டிஸ் 3 விக்கெட் வீழ்த்தினர்.பின் 2வது இன்னிங்சை துவக்கிய இலங்கை அணிக்கு பதும் நிசங்கா (2) ஏமாற்றினார். திமுத் கருணாரத்னே (83), தினேஷ் சண்டிமால் (61) நம்பிக்கை தந்தனர். கமிந்து மெண்டிஸ் (13) நிலைக்கவில்லை. ஆட்டநேர முடிவில் இலங்கை அணி 2வது இன்னிங்சில் 237/4 ரன் எடுத்து, 202 ரன் முன்னிலை பெற்றிருந்தது. மாத்யூஸ் (34), கேப்டன் தனஞ்செயா டி சில்வா (34) அவுட்டாகாமல் இருந்தனர். நியூசிலாந்து சார்பில் வில்லியம் ஓ'ரூர்க் 3 விக்கெட் கைப்பற்றினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை