மேலும் செய்திகள்
இந்தியா-எமிரேட்ஸ் மோதல்: ஜூனியர் ஆசிய கோப்பையில்
11-Dec-2025
மும்பை: உலக கோப்பை (19 வயது) தொடருக்கான இந்திய அணியில் தீபேஷ், அம்ப்ரிஷ் என இரண்டு தமிழக வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.ஜிம்பாப்வே, நமீபியாவில் (2026, ஜன. 15 - பிப். 6), 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக கோப்பை (50 ஓவர்) கிரிக்கெட் தொடர் நடக்கவுள்ளது. 'நடப்பு சாம்பியன்' ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து உள்ளிட்ட 14 அணிகள் பங்கேற்கின்றன. இந்திய அணி 'ஏ' பிரிவில் அமெரிக்கா (ஜன. 15), வங்கதேசம் (ஜன. 17), நியூசிலாந்து (ஜன. 24) அணிகளுடன் இடம் பெற்றுள்ளது.இத்தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டது. கேப்டனாக ஆயுஷ் மாத்ரே, துணை கேப்டனாக விஹான் மல்ஹோத்ரா நியமிக்கப்பட்டனர். இந்த அணியில் தமிழகம் சார்பில் தீபேஷ், அம்ப்ரிஷ் என இரண்டு பேர் இடம் பெற்றுள்ளனர்.வேகப்பந்துவீச்சாளரான தீபேஷ், சமீபத்தில் முடிந்த 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசிய கோப்பையில் அதிக விக்கெட் (14) சாய்த்த வீரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தார். மலேசியாவுக்கு எதிராக 5 விக்கெட் கைப்பற்றினார். 'ஆல்-ரவுண்டர்' அம்ப்ரிஷ், இங்கிலாந்துக்கு எதிரான யூத் ஒருநாள் போட்டியில் அரைசதம் விளாசினார்.இந்திய அணி: ஆயுஷ் மாத்ரே (கேப்டன்), விஹான் மல்ஹோத்ரா (துணை கேப்டன்), வைபவ் சூர்யவன்ஷி, ஆரோன் ஜார்ஜ், வேதாந்த் திரிவேதி, அபிக்யான் குண்டு (விக்கெட் கீப்பர்), ஹர்வன்ஷ் சிங் (விக்கெட் கீப்பர்), அம்ப்ரிஷ், கனிஷ்க் சவுகான், கிலான் படேல், முகமது ஏனான், ஹெனில் படேல், தீபேஷ், கிஷான் குமார் சிங், உதவ் மோகன்.
11-Dec-2025