உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / டென்னிஸ்: மாயா சாம்பியன்

டென்னிஸ்: மாயா சாம்பியன்

கிளாடுபெக்: பெண்களுக்கான ஜூனியர் ஐ.டி.எப்., டென்னிஸ் தொடரில் இந்தியாவின் மாயா, கோப்பை வென்றார். ஜெர்மனியில் பெண்களுக்கான ஜூனியர் ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர் நடந்தது. ஒற்றையர் பிரிவு பைனலில் இந்தியாவின் மாயா ரேவதி, சுவிட்சர்லாந்தின் நோயலியாவை சந்தித்தார். இதில் மாயா 6-2, 6-4 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று, கோப்பை வென்றார். இரட்டையர் பிரிவு பைனலில் மாயா, ஆஸ்திரேலியாவின் நிஷிகவா ஜோடி, ஸ்பெயினின் கேபிரியலா, தென் கொரியாவின் ஹா யூன் சன் ஜோடியை சந்தித்தது. இதில் மாயா ஜோடி 6-7, 3-6 என்ற நேர் செட் கணக்கில் தோல்வியடைந்து, இரண்டாவது இடம் பெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை