மேலும் செய்திகள்
ஷ்ரேயஸ் மீண்டும் கேப்டன்
25-Sep-2025
நாக்பூர்: இரானி கோப்பையில் விதர்பா பவுலர்கள் அசத்த, 'ரெஸ்ட் ஆப் இந்தியா' அணி தடுமாறியது.நாக்பூரில், இரானி கோப்பை கிரிக்கெட் (முதல் தரம்) 62வது சீசன் நடக்கிறது. இதில் 'நடப்பு ரஞ்சி கோப்பை சாம்பியன்' விதர்பா, 'ரெஸ்ட் ஆப் இந்தியா' அணிகள் விளையாடுகின்றன. முதல் நாள் முடிவில், விதர்பா அணி முதல் இன்னிங்சில் 280/5 ரன் எடுத்திருந்தது. அதர்வா (118), யாஷ் தாகூர் (4) அவுட்டாகாமல் இருந்தனர்.இரண்டாம் நாள் ஆட்டத்தில் விதர்பா அணிக்கு யாஷ் தாகூர் (11), ஹர்ஷ் துபே (0) ஏமாற்றினர். தர்ஷன் (20) நிலைக்கவில்லை. அபாரமாக ஆடிய அதர்வா, 143 ரன்னில் ஆட்டமிழந்தார். விதர்பா அணி முதல் இன்னிங்சில் 342 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. 'ரெஸ்ட் ஆப் இந்தியா' சார்பில் ஆகாஷ் தீப், மானவ் சுதர் தலா 3 விக்கெட் கைப்பற்றினர்.பின் முதல் இன்னிங்சை துவக்கிய 'ரெஸ்ட் ஆப் இந்தியா' அணிக்கு அபிமன்யு ஈஸ்வரன் (52), ஆர்யன் ஜுயல் (23) நல்ல துவக்கம் கொடுத்தனர். யாஷ் துல் (11), ருதுராஜ் கெய்க்வாட் (9), இஷான் கிஷான் (1) சோபிக்கவில்லை. ஆட்டநேர முடிவில் 'ரெஸ்ட் ஆப் இந்தியா' அணி 142/5 ரன் எடுத்து, 200 ரன் பின்தங்கி இருந்தது. கேப்டன் ரஜத் படிதர் (42), மானவ் சுதர் (1) அவுட்டாகாமல் இருந்தனர். விதர்பா அணி சார்பில் பார்த் ரகாதே 2 விக்கெட் வீழ்த்தினார்.
25-Sep-2025