உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / விதர்பா அணி முன்னிலை: இரானி கோப்பையில்

விதர்பா அணி முன்னிலை: இரானி கோப்பையில்

நாக்பூர்: இரானி கோப்பையில் விதர்பா அணி முன்னிலை பெற்றது.நாக்பூரில், இரானி கோப்பை கிரிக்கெட் (முதல் தரம்) 62வது சீசன் நடக்கிறது. இதில் 'நடப்பு ரஞ்சி கோப்பை சாம்பியன்' விதர்பா, 'ரெஸ்ட் ஆப் இந்தியா' அணிகள் விளையாடுகின்றன. விதர்பா அணி முதல் இன்னிங்சில் 342 ரன் எடுத்தது. இரண்டாம் நாள் முடிவில் 'ரெஸ்ட் ஆப் இந்தியா' அணி, முதல் இன்னிங்சில் 142/5 ரன் எடுத்திருந்தது. படிதர் (42), மானவ் சுதர் (1) அவுட்டாகாமல் இருந்தனர்.மூன்றாம் நாள் ஆட்டத்தில் ஆதித்யா தாக்கரே 'வேகத்தில்' மானவ் சுதர் (1) வெளியேறினார். யாஷ் தாகூர் பந்தில் சரண்ஷ் ஜெயின் (10), ஆகாஷ் தீப் (14) அவுட்டாகினர். பொறுப்பாக ஆடிய கேப்டன் ரஜத் படிதர் (66) அரைசதம் கடந்தார். 'ரெஸ்ட் ஆப் இந்தியா' அணி முதல் இன்னிங்சில் 214 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. அன்ஷுல் கம்போஜ் (10) அவுட்டாகாமல் இருந்தார். விதர்பா அணி சார்பில் யாஷ் தாகூர் 4 விக்கெட் கைப்பற்றினார்.பின் 2வது இன்னிங்சை துவக்கிய விதர்பா அணிக்கு அதர்வா (15), அமன் (37) ஜோடி சுமாரான துவக்கம் கொடுத்தது. விதர்பா அணி 96/2 ரன் எடுத்து, 224 ரன் முன்னிலை பெற்றிருந்த போது, போதிய வெளிச்சமின்யைால் 3ம் நாள் ஆட்டம் முன்னதாகவே முடிவுக்கு வந்தது. துருவ் ஷோரே (24), டேனிஷ் (16) அவுட்டாகாமல் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ