செஸ்: பிரக்ஞானந்தா அபாரம்
தாஷ்கென்ட்: உஸ்பெகிஸ்தானின் தாஷ்கென்ட் நகரில் மாஸ்டர்ஸ் கோப்பை செஸ் தொடர் நடக்கிறது. இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி, பிரக்ஞானந்தா, அரவிந்த் சிதம்பரம் உட்பட உலகின் 10 முன்னணி வீரர்கள் பங்கேற்கின்றனர். நேற்று இரண்டாவது சுற்று நடந்தது. பிரக்ஞானந்தா, உஸ்பெகிஸ்தானின் ஷம்சிதினை சந்தித்தார். பிரக்ஞானந்தா, 33வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். அர்ஜுன், ஈரானின் பர்ஹாம் மோதிய போட்டி 35வது நகர்த்தலில் 'டிரா' ஆனது. அரவிந்த் சிதம்பரம், உஸ்பெகிஸ்தான் வீரர் நாடிர்பெக்கிடம் தோல்வியடைந்தார். முதல் இரு சுற்று முடிவில் இந்திய வீரர்கள் அர்ஜுன் (1.5 புள்ளி), பிரக்ஞானந்தா (1.5) 3, 4 வது இடத்தில் உள்ளனர். அரவிந்த் சிதம்பரம் (0.5) 8வது இடத்தில் உள்ளார்.