உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / அரையிறுதியில் இந்திய பெண்கள் * பார்வையற்றோர் உலக கோப்பை தொடரில்...

அரையிறுதியில் இந்திய பெண்கள் * பார்வையற்றோர் உலக கோப்பை தொடரில்...

புதுடில்லி: பார்வையற்ற பெண்களுக்கான 'டி-20' உலக கோப்பை தொடரில் தொடர்ந்து நான்காவது வெற்றி பெற்ற இந்திய அணி, அரையிறுதிக்கு முன்னேறியது.இந்தியா, இலங்கையில், பார்வை குறைபாடுள்ள பெண்களுக்கான 'டி-20' உலக கோப்பை முதல் சீசன் நடக்கிறது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, இலங்கை, நேபாளம் உள்ளிட்ட 7 அணிகள் பங்கேற்கின்றன. முதல் மூன்று போட்டியில் இலங்கை, ஆஸ்திரேலியா, நேபாள்த்தை வென்ற இந்திய அணி, நேற்று அமெரிக்காவை எதிர்கொண்டது. 'டாஸ்' வென்ற அமெரிக்கா முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 60 ரன் மட்டும் எடுத்தது. இந்தியாவின் சிம்ரன்ஜீத் கவுர், சுனிதா, சிமு தாஸ், கங்கா தலா ஒரு விக்கெட் சாய்த்தனர். அடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு சிம்ரன்ஜீத் கவுர் (12 பந்து, 31 ரன்), காவ்யா (12 பந்து, 21 ரன்) ஜோடி கைகொடுக்க, 3.3 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 61/0 ரன் எடுத்து, 10 விக்கெட்டில் வெற்றி பெற்றது. தொடர்ந்து நான்கு வெற்றியுடன் பட்டியலில் முதலிடத்தை உறுதி செய்தது, அரையிறுதிக்கு முன்னேறியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ