உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / இளம் இந்திய அணி அசத்தல்: சூர்யவன்ஷி் அரைசதம் விளாசல்

இளம் இந்திய அணி அசத்தல்: சூர்யவன்ஷி் அரைசதம் விளாசல்

பெக்கன்ஹாம்: முதல் 'யூத்' டெஸ்டில் இளம் இந்திய அணி முன்னிலை பெற்றது.இங்கிலாந்து சென்றுள்ள 19 வயதுக்குட்பட்ட இந்திய அணி, இரண்டு போட்டிகள் கொண்ட 'யூத்' டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி பெக்கன்ஹாமில் நடக்கிறது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 540 ரன் குவித்தது. இரண்டாம் நாள் முடிவில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 230/5 ரன் எடுத்திருந்தது.மூன்றாம் நாள் ஆட்டத்தில் சூர்யவன்ஷி பந்தில் தாமஸ் ரெவ் (34) அவுட்டானார். பொறுப்பாக ஆடிய ஏகான்ஷ் சிங் (59), ரால்பி ஆல்பர்ட் (50) அரைசதம் விளாசினர். ஜாக் ஹோம் (44), ஜேம்ஸ் மின்டோ (20) ஆறுதல் தந்தனர். இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 439 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. இந்தியா சார்பில் ஹெனில் படேல் 3, வைபவ் சூர்யவன்ஷி, அம்ப்ரிஷ் தலா 2 விக்கெட் கைப்பற்றினர். இந்திய அணி 101 ரன் முன்னிலை பெற்றது.பின் 2வது இன்னிங்சை துவக்கிய இந்திய அணிக்கு வைபவ் சூர்யவன்ஷி (56) அரைசதம் கடந்தார். கேப்டன் ஆயுஷ் (32) ஆறுதல் தந்தார். ஆட்டநேர முடிவில் இந்திய அணி 128/3 ரன் எடுத்து, 229 ரன் முன்னிலை பெற்றது. விஹான் (34) அவுட்டாகாமல் இருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை