மேலும் செய்திகள்
ஹாரி கேன் சாதனை: ரொனால்டோவை முந்தினார்
27-Sep-2025
தெற்காசிய கால்பந்து: பைனலில் இந்தியா
25-Sep-2025
புட்சல்: இந்தியா முதல் வெற்றி
25-Sep-2025
மெஸ்ஸி மேஜிக்: மயாமி வெற்றி
21-Sep-2025
டார்ட்மண்ட்: 'யூரோ' கோப்பை கால்பந்து பைனலுக்கு இங்கிலாந்து அணி முன்னேறியது. அரையிறுதியில் 2-1 என நெதர்லாந்தை வீழ்த்தியது.ஜெர்மனியில், ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் ('யூரோ' கோப்பை) 17வது சீசன் நடக்கிறது. முதல் அரையிறுதியில் பிரான்சை வீழ்த்திய ஸ்பெயின், முதல் அணியாக பைனலுக்குள் நுழைந்தது. டார்ட்மண்ட் நகரில் நடந்த 2வது அரையிறுதியில் இங்கிலாந்து, நெதர்லாந்து அணிகள் மோதின.ஆட்டத்தின் 7வது நிமிடத்தில் நெதர்லாந்தின் சேவி சைமன்ஸ் ஒரு கோல் அடித்தார். இதற்கு 18வது நிமிடத்தில் கிடைத்த 'பெனால்டி' வாய்ப்பில் இங்கிலாந்து கேப்டன் ஹாரி கேன் ஒரு கோல் அடித்து பதிலடி கொடுத்தார். முதல் பாதி 1-1 என சமநிலையில் இருந்தது. இரண்டாவது பாதியின் 'ஸ்டாப்பேஜ்' நேரத்தில் (90+1வது நிமிடம்) இங்கிலாந்தின் ஒல்லீ வாட்கின்ஸ் ஒரு கோல் அடித்தார். ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று, தொடர்ச்சியாக 2வது முறை (2021, 2024) பைனலுக்கு தகுதி பெற்றது. லண்டனில் 2021ல் நடந்த பைனலில் இங்கிலாந்து அணி 2-3 என 'பெனால்டி ஷூட் அவுட்' முறையில் இத்தாலி அணியிடம் தோல்வியடைந்து 2வது இடம் பிடித்தது.பெர்லினில், ஜூலை 14ல் நடக்கவுள்ள பைனலில் இங்கிலாந்து, ஸ்பெயின் அணிகள் மோதுகின்றன.
27-Sep-2025
25-Sep-2025
25-Sep-2025
21-Sep-2025