மேலும் செய்திகள்
ராபின் ஸ்மித் மரணம்
02-Dec-2025
லண்டன்: பிரிமியர் லீக் கால்பந்து அரங்கில் அதிவேகமாக 100 கோல் அடித்து சாதனை படைத்தார் எர்லிங் ஹாலந்து.இங்கிலாந்தில், பிரிமியர் லீக் கால்பந்து 34வது சீசன் நடக்கிறது. லண்டனில் நடந்த லீக் போட்டியில் புல்ஹாம், மான்செஸ்டர் சிட்டி அணிகள் மோதின. இதில் மான்செஸ்டர் சிட்டி அணி 5-4 என்ற கோல் கணக்கில் 'திரில்' வெற்றி பெற்றது. இப்போட்டியின் 17வது நிமிடத்தில் மான்செஸ்டர் சிட்டி அணியின் நார்வே வீரர் எர்லிங் ஹாலந்து 25, ஒரு கோல் அடித்தார். இது, பிரிமியர் லீக் தொடரில் இவரது 100வது கோல் ஆனது.இம்மைல்கல்லை இவர், 111 போட்டியில் எட்டினார். இதன்மூலம் பிரிமியர் லீக் கால்பந்து வரலாற்றில் குறைந்த போட்டியில் 100 கோல் அடித்த வீரர் என்ற வரலாறு படைத்தார் எர்லிங் ஹாலந்து. இதற்கு முன், பிளாக்ப்ர்ன் ரோவர்ஸ் அணிக்காக விளையாடிய இங்கிலாந்தின் ஆலன் ஷீரர் 124 போட்டியில், 100 கோல் அடித்திருந்தார். பிரிமியர் லீக் அரங்கில் அதிக கோல் அடித்த வீரர்கள் வரிசையில் ஷீரர் (260) முதலிடத்தில் உள்ளார்.இத்தொடரில் அதிவேகமாக 100 கோல் அடித்த வீரர்கள் பட்டியலில் இங்கிலாந்தின் ஹாரி கேன் (141 போட்டி) 3வது இடத்தில் உள்ளார்.
02-Dec-2025