உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கால்பந்து / உலக கோப்பை: ஜெர்மனி தகுதி

உலக கோப்பை: ஜெர்மனி தகுதி

பெர்லின்: 'பிபா' உலக கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, மெக்சிகோ, கனடாவில், 2026, ஜூன் 11-ஜூலை 19ல் நடக்க உள்ளது. 48 அணிகள் பங்கேற்க உள்ளன. ஐரோப்பிய அணிகளுக்கான தகுதிச்சுற்றில் 54 அணிகள் 12 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, லீக் முறையில் போட்டியில் பங்கேற்கின்றன. ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பெறும் அணி உலக கோப்பை தொடருக்கு முன்னேறும். 'ஏ' பிரிவில் ஜெர்மனி, சுலோவாகியா அணிகள் தலா 12 புள்ளியுடன் 'டாப்-2' இடத்தில் உள்ளன. பெர்லினில் நடந்த கடைசி லீக் போட்டியில் ஜெர்மனி, சுலோவாகியா அணிகள் மோதின. இதில் வெல்லும் அணி, உலக கோப்பை தொடருக்கு தகுதி பெறலாம் என்ற நிலையில், ஜெர்மனி 6-0 என சுலோவாகியாவை வீழ்த்தியது. முடிவில் 6 போட்டியில் 15 புள்ளியுடன் (5 வெற்றி, 1 தோல்வி) முதலிடம் பிடித்து, உலக கோப்பை தொடருக்கு தகுதி பெற்றது.நெதர்லாந்து அபாரம்'ஜி' பிரிவில் நேற்று நடந்த கடைசி போட்டியில் நெதர்லாந்து அணி 4-0 என லிதுவேனியாவை வென்றது. 8 போட்டியில் 6 வெற்றி, 2 'டிரா' செய்த நெதர்லாந்து அணி, 20 புள்ளியுடன் முதலிடம் பெற்று, உலக கோப்பை தொடருக்கு முன்னேறியது. இதுவரை ஆப்ரிக்கா (9), ஆசியா (8), ஐரோப்பா (7), தென் அமெரிக்கா (6), வட அமெரிக்கா (3), ஓசியானா (1) மண்டலங்களில் இருந்து மொத்தம் 34 அணிகள், உலக கோப்பை தொடருக்கு முன்னேறின.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி