உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கால்பந்து / இந்தியா-சிங்கப்பூர் பலப்பரீட்சை * ஆசிய கால்பந்து தகுதிச்சுற்றில்...

இந்தியா-சிங்கப்பூர் பலப்பரீட்சை * ஆசிய கால்பந்து தகுதிச்சுற்றில்...

கோவா: ஆசிய கோப்பை கால்பந்து தொடர் 2027ல் சவுதி அரேபியாவில் நடக்க உள்ளது. இதற்கான மூன்றாவது கட்ட தகுதிச்சுற்றில் 24 அணிகள் பங்கேற்கின்றன. உலகத் தரவரிசையில் 134 வது இடத்திலுள்ள இந்திய அணி 'சி' பிரிவில் ஹாங்காங், சிங்கப்பூர், வங்கதேசம் அணிகளுடன் இடம் பெற்றுள்ளது. இதுவரை முதல் மூன்று போட்டியில் இந்திய அணி, 2 டிரா (வங்கதேசம்), தோல்வியுடன் (ஹாங்காங்) 2 புள்ளி மட்டும் பெற்று, பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது. சொந்தமண்ணில்...இன்று இந்திய அணி தனது, சொந்தமண்ணில் (கோவா) பங்கேற்கும் நான்காவது போட்டியில், தரவரிசையில் 158வது இடத்திலுள்ள சிங்கப்பூர் அணியை மீண்டும் சந்திக்கிறது. புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்தால் மட்டுமே ஆசிய கோப்பை செல்ல முடியும் என்ற நிலையில் இந்தியா இன்று வென்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. புதிய பயிற்சியாளர் காலித் ஜமில் தலைமையில் இந்திய அணி, தரவரிசையில் முன்னணியில் உள்ள அணிகளுக்கு எதிரான, நேஷன்ஸ் கோப்பை சிறப்பாக செயல்பட்டது (3வது இடம்). ஆனால் தரவரிசையில் பின்தங்கிய சிங்கப்பூர் அணியிடம் 'டிரா' செய்தது ஏமாற்றமாக இருந்தது. இன்று இந்திய அணி முதல் வெற்றியை பதிவு செய்தால், ஆசிய கோப்பை தகுதி வாய்ப்பை தக்கவைக்கலாம். 'சீனியர்' சுனில் செத்ரி அணிக்கு திரும்பியது பலம். மாறாக அனுபவ சந்தேஷ் ஜின்கன், 'ரெட் கார்டு' காரணமாக இன்று களமிறங்க முடியாதது பின்னடைவாக இருக்கலாம். சிங்கப்பூர் அணிக்கு, கடந்த போட்டியில் கைகொடுத்த, இக் ஷான் பண்டி (42 போட்டி, 22 கோல்) மீண்டும் உதவ காத்திருக்கிறார்.யார் ஆதிக்கம்இந்தியா, சிங்கப்பூர் அணிகள் 28 போட்டியில் மோதின. இந்தியா 12, சிங்கப்பூர் 11ல் வென்றன. 5 போட்டி 'டிரா' ஆகின.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ