மேலும் செய்திகள்
இந்தியா-மாலத்தீவு மோதல் * பெண்கள் கால்பந்தில்...
20-Dec-2024
பெங்களூரு: நட்பு கால்பந்து போட்டியில் இந்திய பெண்கள் அணி 11-1 என்ற கோல் கணக்கில் மாலத்தீவை வீழ்த்தியது. இந்தியா வந்த மாலத்தீவு (163 வது இடம்) பெண்கள் கால்பந்து அணி, இரண்டு நட்பு போட்டியில் பங்கேற்றது. முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டி நேற்று பெங்களூருவில் நடந்தது.உலகத் தரவரிசையில் 69 வது இடத்திலுள்ள இந்திய பெண்கள் அணியினர், மீண்டும் ஆதிக்கம் செலுத்தினர். இந்தியாவின் அறிமுக வீராங்கனை லிங்தேய்கிம், 12, 16, 56, 59 வது நிமிடங்களில் அசத்தி, நான்கு கோல் அடித்து மிரட்டினார். சிம்ரன் தன் பங்கிற்கு 62, 68 வது நிமிடங்களில் என இரண்டு கோல் அடித்தார். காஜோல் (15), கேப்டன் சங்கிதா (17), பூஜா (41), சிபானி தேவி (45), பூமிகா தேவி (71) தங்கள் பங்கிற்கு தலா ஒரு கோல் அடித்தனர். மாலத்தீவு சார்பில் 27 வது நிமிடத்தில் மரியம் ரிபா ஒரு கோல் அடித்து ஆறுதல் தந்தார். முடிவில் இந்திய அணி 11-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
20-Dec-2024