உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கால்பந்து / இந்திய ராணுவ அணி வெற்றி: துாரந்த் கோப்பை கால்பந்தில்

இந்திய ராணுவ அணி வெற்றி: துாரந்த் கோப்பை கால்பந்தில்

ஜாம்ஷெட்பூர்: துாரந்த் கோப்பை கால்பந்து லீக் போட்டியில் இந்திய ராணுவ அணி ஆறுதல் வெற்றி பெற்றது.இந்தியாவில், துாரந்த் கோப்பை கால்பந்து 134வது சீசன் நடக்கிறது. மொத்தம் 24 அணிகள், 6 பிரிவுகளாக லீக் சுற்றில் விளையாடுகின்றன.ஜார்க்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரில் நடந்த 'சி' பிரிவு லீக் போட்டியில் இந்திய ராணுவம், லடாக் அணிகள் மோதின. இந்திய ராணுவ அணி 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. ராணுவ அணி சார்பில் சாமா (41வது நிமிடம்), அபிஷேக் (45வது), கிறிஸ்டோ (51வது), அப்பு (55வது) தலா ஒரு கோல் அடித்தனர். லடாக் அணிக்கு கமலேஷ் (23வது நிமிடம்), விக்னேஷ் (37வது) ஆறுதல் தந்தனர்.'சி' பிரிவு லீக் சுற்றின் முடிவில், ஜாம்ஷெட்பூர் அணி 9 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து 'நாக்-அவுட்' சுற்றுக்கு முன்னேறியது. அடுத்த மூன்று இடங்களை பிடித்த இந்திய ராணுவம் (6 புள்ளி), திரிபுவன் ஆர்மி (1), லடாக் (1) அணிகள் வெளியேறின. மற்ற பிரிவுகளில் முதலிடம் பிடித்த ஈஸ்ட் பெங்கால் ('ஏ', 9 புள்ளி), மோகன் பகான் ('பி', 9 புள்ளி), வடகிழக்கு யுனைடெட் ('இ', 6 புள்ளி) அணிகளும் 'நாக்-அவுட்' சுற்றுக்கள் நுழைந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை