ஐ.எஸ்.எல்., கால்பந்து: மும்பை-ஒடிசா டிரா
மும்பை: மும்பை, ஒடிசா அணிகள் மோதிய ஐ.எஸ்.எல்., கால்பந்து லீக் போட்டி 1-1 என 'டிரா' ஆனது.இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.,) கால்பந்து 11வது சீசன் நடக்கிறது. நேற்று, மும்பையில் நடந்த லீக் போட்டியில் மும்பை, ஒடிசா அணிகள் மோதின. ஆட்டத்தின் 14வது நிமிடத்தில் ஒடிசா அணியின் ராய் கிருஷ்ணா ஒரு கோல் அடித்தார். இதற்கு, 23வது நிமிடத்தில் மும்பையின் நிகோலாஸ் கரேலிஸ் ஒரு கோல் அடித்து பதிலடி கொடுத்தார். முதல் பாதி முடிவு 1-1 என சமநிலையில் இருந்தது.இரண்டாவது பாதியில் கடைசி நிமிடம் வரை போராடிய இரு அணியினரால் கூடுதலாக கோல் அடிக்க முடியவில்லை. ஆட்டநேர முடிவில் போட்டி 1-1 என 'டிரா' ஆனது. மும்பை அணி 5 போட்டியில், ஒரு வெற்றி, 3 'டிரா', ஒரு தோல்வி என 6 புள்ளிகளுடன் 9வது இடத்துக்கு முன்னேறியது. ஒடிசா அணி 6 போட்டியில், 2 வெற்றி, 2 'டிரா', 2 தோல்வி என 8 புள்ளிகளுடன் 7வது இடத்தில் உள்ளது.