மேலும் செய்திகள்
ஐ.எஸ்.எல்., கால்பந்து: சென்னை அணி ஏமாற்றம்
03-Mar-2025
பெங்களூரு: ஐ.எஸ்.எல்., கால்பந்து 'பிளே ஆப்' போட்டியில் இன்று பெங்களூரு, மும்பை அணிகள் மோதுகின்றன. இதில் வெல்லும் அணி அரையிறுதிக்கு முன்னேறும்.இந்தியாவில் ஐ.எஸ்.எல்., கால்பந்து 11வது சீசன் நடக்கிறது. மொத்தம் 13 அணிகள் பங்கேற்கின்றன. லீக் சுற்று முடிவில் முதல் இரு இடம் பெற்ற மோகன் பகான், கோவா அணிகள் நேரடியாக அரையிறுதிக்கு முன்னேறின. அடுத்த நான்கு இடம் பெற்ற பெங்களூரு, வடகிழக்கு யுனைடெட், ஜாம்ஷெட்பூர், மும்பை அணிகள் 'பிளே ஆப்' சுற்றுக்கு தகுதி பெற்றன.இதில் இன்று நடக்கும் 'நாக் அவுட்' போட்டியில் பெங்களூரு, மும்பை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் வெல்லும் அணி அரையிறுதியில் கோவாவை எதிர்கொள்ளும்.செத்ரி பலம்பெங்களூரு அணியை பொறுத்தவரையில், லீக் சுற்றில் 24 போட்டியில் 38 புள்ளி (11 வெற்றி, 5 'டிரா', 8 தோல்வி) பெற்று, மூன்றாவது இடம் பெற்றது. 'பிளே ஆப்' வரலாற்றில் அதிக கோல் (8) அடித்த வீரரான சுனில் செத்ரி இருப்பது பலம். தவிர, ஐ.எஸ்.எல்., தொடரில் மும்பை அணிக்கு எதிராக 10 கோல் அடித்த முதல் வீரர் இவர், மீண்டும் மிரட்டினால், பெங்களூரு வெற்றி எளிதாகும்.மும்பை அணி 24 போட்டியில் 9 வெற்றி, 9 'டிரா' செய்ய, 6ல் தோற்றது. 36 புள்ளியுடன் பட்டியலில் 6 வது இடம் பெற்று, 'பிளே ஆப்' சுற்றுக்குள் நுழைந்தது. தவிர 'பிளே ஆப்' வரலாற்றில் தொடர்ந்து அதிக போட்டியில் வென்ற அணியான மும்பை (4 வெற்றி) மீண்டும் அசத்தினால், அரையிறுதிக்கு செல்லலாம். இதற்கேற்ப அணியின் தற்காப்பு பகுதி வலுவாக காணப்படுகிறது. இது பெங்களூரு அணிக்கு ஏமாற்றம் தரலாம்.
03-Mar-2025