மேலும் செய்திகள்
ஹாரி கேன் சாதனை: ரொனால்டோவை முந்தினார்
27-Sep-2025
தெற்காசிய கால்பந்து: பைனலில் இந்தியா
25-Sep-2025
புட்சல்: இந்தியா முதல் வெற்றி
25-Sep-2025
மெஸ்ஸி மேஜிக்: மயாமி வெற்றி
21-Sep-2025
லண்டன்: எப்.ஏ., கோப்பை கால்பந்தில் மான்செஸ்டர் யுனைடெட் அணி சாம்பியன் பட்டம் வென்றது.இங்கிலாந்தில் எப்.ஏ., கோப்பை கால்பந்து 143வது சீசன் நடந்தது. லண்டனில் நடந்த பைனலில் மான்செஸ்டர் சிட்டி, மான்செஸ்டர் யுனைடெட் அணிகள் மோதின. துவக்கத்தில் இருந்து ஆதிக்கம் செலுத்திய மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கு கர்னாச்சோ (30வது நிமிடம்), மைனோ (39வது) தலா ஒரு கோல் அடித்து கைகொடுத்தனர். முதல் பாதி முடிவில் மான்செஸ்டர் யுனைடெட் அணி 2-0 என முன்னிலை பெற்றது.இரண்டாவது பாதியில் மான்செஸ்டர் சிட்டி அணிக்கு 89வது நிமிடத்தில் ஜெரிமி டோகு ஒரு கோல் அடித்து ஆறுதல் தந்தார். ஆட்டநேர முடிவில் மான்செஸ்டர் யுனைடெட் அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று, 13வது முறையாக கோப்பை வென்றது.
27-Sep-2025
25-Sep-2025
25-Sep-2025
21-Sep-2025