உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கால்பந்து / மோகன் பகான் அணி வெற்றி: ஐ.எஸ்.எல்., கால்பந்தில் அசத்தல்

மோகன் பகான் அணி வெற்றி: ஐ.எஸ்.எல்., கால்பந்தில் அசத்தல்

கோல்கட்டா: ஐ.எஸ்.எல்., கால்பந்து லீக் போட்டியில் மோகன் பகான் அணி 3-0 என, ஐதராபாத் அணியை வீழ்த்தியது.இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.,) கால்பந்து 11வது சீசன் நடக்கிறது. கோல்கட்டாவில் நடந்த லீக் போட்டியில் மோகன் பகான், ஐதராபாத் அணிகள் மோதின. ஆட்டத்தின் 9வது நிமிடத்தில் ஐதராபாத் அணியின் ஸ்டீபன் சபிக் 'சேம்சைடு' கோல் அடித்தார். பின் 41வது நிமிடத்தில் மோகன் பகான் அணியின் தாமஸ் மைக்கேல் ஆல்ட்ரெட் ஒரு கோல் அடித்தார். முதல் பாதி முடிவில் மோகன் பகான் அணி 2-0 என முன்னிலையில் இருந்தது.இரண்டாவது பாதியிலும் ஆதிக்கத்தை தொடர்ந்த மோகன் பகான் அணிக்கு 51வது நிமிடத்தில் ஜேசன் கம்மின்ஸ் ஒரு கோல் அடித்து கைகொடுத்தார். கடைசி நிமிடம் வரை போராடிய ஐதராபாத் அணியினரால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. ஆட்டநேர முடிவில் மோகன் பகான் அணி 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.இதுவரை விளையாடிய 14 போட்டியில், 10 வெற்றி, 2 'டிரா', 2 தோல்வி என 32 புள்ளிகளுடன் மோகன் பகான் அணி முதலிடத்தில் நீடிக்கிறது. ஐதராபாத் அணி 10 தோல்வி, 2 'டிரா', 2 வெற்றி உட்பட 8 புள்ளிகளுடன் 12வது இடத்தில் உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை