உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கால்பந்து / ரொனால்டோவின் 1000 இலக்கு

ரொனால்டோவின் 1000 இலக்கு

ரியாத்: போர்ச்சுகலின் ரொனால்டோ, 1000 கோல் என்ற மைல்கல்லை எட்ட விரும்புகிறார்.போர்ச்சுகல் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ 39. சவுதி அரேபியாவில் நடக்கும் புரோ லீக் தொடரில் 'அல்-நாசர்' அணிக்காக விளையாடி வருகிறார். சமீபத்தில் அல்-பய்ஹா அணிக்கு எதிரான லீக் போட்டியில் கிடைத்த 'பிரீ கிக்' வாய்ப்பில் கோல் அடித்தார் ரொனால்டோ. இது, இவரது 899வது கோல் ஆனது. இன்னும் ஒரு கோல் அடிக்கும் பட்சத்தில், 900 கோல் என்ற மைல்கல்லை எட்டலாம்.இதுவரை கிளப் அணிகளுக்கான 769, போர்ச்சுகலுக்காக 130 என 899 கோல் அடித்துள்ள ரொனால்டோ, அதிக கோல் அடித்த வீரர்கள் வரிசையில் முதலிடத்தில் நீடிக்கிறார். அடுத்த இரு இடங்களில் அர்ஜென்டினாவின் மெஸ்சி (838 கோல்), பிரேசில் ஜாம்பவான் பீலே (762) உள்ளனர்.'பிரீ கிக்' மூலம் 64 கோல் அடித்துள்ளள ரொனால்டோ, தொடர்ச்சியாக 24 சீசனில் குறைந்தபட்சம் ஒரு 'பிரீ கிக்' கோல் அடித்த முதல் வீரரானார்.ரொனால்டோ கூறுகையில்,''முதலில் 900 கோல் அடிக்க வேண்டும். கால்பந்து அரங்கில் 1000 கோல் அடிப்பதே இலக்கு. இதற்கு காயம் ஏற்படால் உடற்தகுதியை தக்கவைத்துக் கொள்வது அவசியம். அனைத்தும் சரியாக நடந்தால் எனது 41வது வயதில் இம்மைல்கல்லை எட்டலாம்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை