மேலும் செய்திகள்
ஹாரி கேன் சாதனை: ரொனால்டோவை முந்தினார்
27-Sep-2025
தெற்காசிய கால்பந்து: பைனலில் இந்தியா
25-Sep-2025
புட்சல்: இந்தியா முதல் வெற்றி
25-Sep-2025
மெஸ்ஸி மேஜிக்: மயாமி வெற்றி
21-Sep-2025
பெர்லின்: 'யூரோ' கோப்பை கால்பந்து பைனலில் இன்று ஸ்பெயின், இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.ஜெர்மனியில் நடக்கும் ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் ('யூரோ' கோப்பை) 17வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்று பெர்லினில் நடக்கும் பைனலில் உலகின் 'நம்பர்-5' இங்கிலாந்து அணி, 8வது இடத்தில் உள்ள ஸ்பெயினை எதிர்கொள்கிறது.ஸ்பெயின் அணி 100 சதவீத வெற்றியுடன் 5வது முறையாக பைனலுக்கு முன்னேறியது. டேனி ஆல்மோ (3 கோல்), பேபியன் ரூயிஸ் (2), டேனி கார்வஜல், மெரினோ, ரோட்ரி, பெர்ரன் டோரஸ், நிக்கோ வில்லியம்ஸ், 16 வயது இளம் வீரர் லாமின் யமால் (தலா ஒரு கோல்) மீண்டும் கைகொடுத்தால் சுலப வெற்றி பெறலாம்.முதல் கோப்பை: 'சி' பிரிவு லீக் சுற்றில் (2 வெற்றி, ஒரு 'டிரா') தோல்வியை சந்திக்காத இங்கிலாந்து அணி, 'நாக்-அவுட்' போட்டியில் சுலோவாகியா ('ரவுண்டு-16'), சுவிட்சர்லாந்து (காலிறுதி), நெதர்லாந்து (அரையிறுதி) அணிகளை வீழ்த்தி தொடர்ச்சியாக 2வது முறை 'யூரோ' கோப்பை பைனலுக்கு தகுதியானது. கடந்த முறை (2021) பங்கேற்ற பைனலில் இத்தாலியிடம் தோல்வியடைந்தது.கேப்டன் ஹாரி கேன் (3 கோல்), பெல்லிங்ஹாம் (2), புகாயோ சகா, வாட்கின்ஸ் (தலா ஒரு கோல்) கைகொடுத்தால் முதன்முறையாக 'யூரோ' கோப்பை வெல்லாம். தவிர, 58 ஆண்டுகளுக்கு பின் உலக கோப்பை போன்ற மிகப் பெரிய தொடர்களில் கோப்பை கைப்பற்றலாம். கடைசியாக 1966ல் நடந்த உலக கோப்பையில் இங்கிலாந்து அணி சாம்பியன் பட்டம் வென்றிருந்தது.
சர்வதேச கால்பந்து அரங்கில் இவ்விரு அணிகள் 27 முறை மோதின. இதில் இங்கிலாந்து 14, ஸ்பெயின் 10ல் வெற்றி பெற்றன. மூன்று போட்டி 'டிரா' ஆனது.
27-Sep-2025
25-Sep-2025
25-Sep-2025
21-Sep-2025