உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கால்பந்து / உருகுவே அணி 3வது இடம்: கோபா அமெரிக்கா கால்பந்தில்

உருகுவே அணி 3வது இடம்: கோபா அமெரிக்கா கால்பந்தில்

சார்லோட்: 'கோபா அமெரிக்கா' கால்பந்தில் உருகுவே அணி 3வது இடம் பிடித்தது. 'பெனால்டி ஷூட் அவுட்' முறையில் 4-3 என கனடாவை வீழ்த்தியது.அமெரிக்காவில், 'கோபா அமெரிக்கா' கால்பந்து 48வது சீசன் நடக்கிறது. இதன் 3-4வது இடத்துக்கான போட்டியில் அரையிறுதியில் தோல்வியடைந்த கனடா, உருகுவே அணிகள் மோதின. ஆட்டத்தின் 8 வது நிமிடத்தில் உருகுவேயின் ரோட்ரிகோ பென்டன்குர் ஒரு கோல் அடித்தார். இதற்கு, 22வது நிமிடத்தில் கனடாவின் இஸ்மாயில் கோனே ஒரு கோல் அடித்து பதிலடி கொடுத்தார். பின், 23வது நிமிடத்தில் உருகுவே வீரர் பகுண்டோ பெல்லிஸ்ட்ரி அடித்த கோல், 'ஆப்சைடு' என மறுக்கப்பட்டது. முதல் பாதி முடிவு 1-1 என சமநிலையில் இருந்தது.இரண்டாவது பாதியின் 80வது நிமிடத்தில் கனடாவின் ஜோனாதன் டேவிட் ஒரு கோல் அடித்தார். இதற்கு, 'ஸ்டாப்பேஜ்' நேரத்தில் (90+2வது நிமிடம்) உருகுவேயின் லுாயிஸ் சாரஸ் ஒரு கோல் அடித்து கைகொடுத்தார். ஆட்டநேர முடிவில் போட்டி 2-2 என சமநிலையில் இருந்தது.பின் போட்டியின் முடிவு 'பெனால்டி ஷூட் அவுட்' முறைக்கு சென்றது. இரு அணிகளுக்கும் தலா 5 வாய்ப்புகள் வழங்கப்பட்டன. இதில் வால்வெர்டே, பென்டன்குர், அர்ராஸ்கேட்டா, லுாயிஸ் சாரஸ் கோல் அடித்தனர். கனடாவின் டேவிட், கோனே தங்களது வாய்ப்பை வீணடித்தனர். முடிவில் உருகுவே அணி 4-3 என்ற கணக்கில் வெற்றி பெற்று 10வது முறையாக மூன்றாவது இடத்தை கைப்பற்றியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி