உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / நம்பர்-1 வீரர் அர்ஜுன் * செஸ் தரவரிசையில் கலக்கல்

நம்பர்-1 வீரர் அர்ஜுன் * செஸ் தரவரிசையில் கலக்கல்

புதுடில்லி: இந்தியாவின் புதிய 'நம்பர்-1' வீரர் ஆனார் அர்ஜுன் எரிகைசி.சர்வதேச செஸ் கூட்டமைப்பு ('பிடே') சார்பில் புதிய தரவரிசை பட்டியல் வெளியானது. இதில் 2756 புள்ளி பெற்ற இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி, 9வது இடம் பிடித்தார். மற்ற இந்திய வீரர்களான ஜாம்பவான் ஆனந்த் (2751 புள்ளி) 11வது, பிரக்ஞானந்தா (2747) 14வது, குகேஷ் (2743) 16வது, விதித் சந்தோஷ் குஜ்ராத்தி (2727), 25வது, ஹரிகிருஷ்ணா (2701) 37வது இடம் பெற்றனர். நார்வேயின் கார்ல்சன் (2830), அமெரிக்காவின் பேபியானோ காருணா (2803), ஹிகாரு நகமுரா (2789) 'டாப்-3' வீரர்களாக உள்ளனர்.இந்திய அளவில் புதிய 'நம்பர்-1' வீரர் ஆனார் ஆந்திராவின் அர்ஜுன். தமிழகத்தின் ஆனந்த் இரண்டாவது இடத்திற்கு பின்தங்கினார்.யாருக்கு வாய்ப்புகேண்டிடேட்ஸ் செஸ் தொடர் நாளை கனடாவில் துவங்குகிறது. ஆண்கள் பிரிவில் பிரக்ஞானந்தா, குகேஷ், விதித் சந்தோஷ் குஜ்ராத்தி உட்பட 8 பேர் பங்கேற்கின்றனர். இதில் வெல்லும் வீரர், உலக சாம்பியன்ஷிப் போட்டியில் 'நடப்பு சாம்பியன' சீனாவின் டிங் லிரெனை எதிர்த்து களமிறங்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ