மேலும் செய்திகள்
கார்ல்சனை வீழ்த்திய அர்ஜுன்
13 hour(s) ago
பைனலில் இந்திய ஜோடி * சென்னை டேபிள் டென்னிசில்...
14 hour(s) ago
உலக விளையாட்டு செய்திகள்
13-Feb-2026
இந்திய பாரா நீச்சல் வீரர் சாதனை
13-Feb-2026
ஆன்டலியா: ஒலிம்பிக் வில்வித்தை தகுதிச் சுற்றில் இந்திய பெண்கள் அணி, உக்ரைனிடம் தோல்வியடைந்தது.பிரான்ஸ் தலைநகர் பாரிசில், 33வது ஒலிம்பிக் போட்டி (ஜூலை 26 - ஆக. 11) நடக்கவுள்ளது. இதில் இடம் பெற்றுள்ள வில்வித்தை போட்டிக்கான உலக தகுதிச் சுற்று துருக்கியில் நடக்கிறது. பெண்கள் அணிகளுக்கான 'ரீகர்வ்' பிரிவு 'ரவுண்டு-16' போட்டியில் உலகின் 'நம்பர்-8' இந்திய அணி, 18வது இடத்தில் உள்ள உக்ரைன் அணியை சந்தித்தது. தீபிகா குமாரி, பஜன் கவுர், அன்கிதா பகத் அடங்கிய இந்திய அணி ஒரு கட்டத்தில் 3-1 என முன்னிலை வகித்திருந்தது. பின் ஏமாற்ற 3-5 என்ற (51-51, 55-52, 53-54, 52-54) என்ற கணக்கில் அதிர்ச்சி தோல்வியடைந்தது.தகுதிச் சுற்றில் ஏமாற்றிய இந்திய பெண்கள் அணி, தரவரிசை அடிப்படையில் பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் விளையாடும் வாய்ப்பு உள்ளது.
13 hour(s) ago
14 hour(s) ago
13-Feb-2026
13-Feb-2026