உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / தங்கம் வென்றார் ஜோதி * ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப்பில்...

தங்கம் வென்றார் ஜோதி * ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப்பில்...

தாகா: ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப்பில் மூன்றாவது தங்கம் வென்ற முதல் வீராங்கனை ஆனார் இந்தியாவின் ஜோதி.வங்கதேசத்தின் தாகாவில் ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப் நடக்கிறது. தனிநபர் பெண்களுக்கான காம்பவுண்டு பிரிவு போட்டி நடந்தன. இதன் அரையிறுதியில் இந்தியாவின் ஜோதி, 149-143 என தென் கொரியாவின் சி யு செனை வீழ்த்தினார். மற்றொரு அரையிறுதியில் இந்தியாவின் பிரித்திகா 146-145 என வங்கதேசத்தின் குல்சுமை வென்றார். பின் நடந்த பைனலில் ஜோதி, பிரித்திகா மோதினர். இதில் ஜோதி 147-145 என வென்று, தங்கம் கைப்பற்றினார். கடந்த 2015, 2021, தற்போது 2025 என ஆசிய சாம்பியன்ஷிப்பில் மூன்று தங்கம் வென்ற முதல் வீராங்கனை என பெருமை பெற்றார் ஜோதி. இரண்டு 'தங்கம்'பெண்களுக்கான காம்பவுண்டு அணிகள் பிரிவு பைனலில் இந்தியாவின் தீப்ஷிஹா, ஜோதி, பிரித்திகா அடங்கிய அணி, தென் கொரியாவை சந்தித்தது. இதில் இந்திய அணி 236-234 என்ற கணக்கில் வெற்றி பெற்று, தங்கம் வசப்படுத்தியது. * காம்பவுண்டு கலப்பு அணிகளுக்கான பைனலில் இந்தியாவின் அபிஷேக், தீப்ஷிஹா இடம் பெற்ற அணி, வங்கதேசத்தை எதிர்கொண்டது. இதில் இந்தியா 153-151 என வென்று, தங்கம் கைப்பற்றியது. * ஆண்களுக்கான காம்பவுண்டு அணிகள் பிரிவில் இந்தியாவின் அபிஷேக், பிரதமேஷ், சாஹில் ராஜேஷ் அடங்கிய அணி, பைனலில் 229-230 என கஜகஸ்தானிடம் தோற்க, வெள்ளிப்பதக்கம் கிடைத்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை