மேலும் செய்திகள்
வில்வித்தை: இந்தியா 'வெண்கலம்'
10-Apr-2025
ஆசிய பேஸ்பால்: இந்தியா தகுதி
28-Apr-2025
ஷாங்காய்: உலக கோப்பை வில்வித்தை பைனலுக்கு இந்திய ஆண், பெண்கள் அணிகள் முன்னேறின.சீனாவின் ஷாங்காய் நகரில் உலக கோப்பை வில்வித்தை ஸ்டேஜ் 2 நடக்கிறது. காம்பவுண்டு ஆண்கள் பிரிவில் அபிஷேக் வர்மா, ரிஷாப் யாதவ், ஓஜாஸ் பிரவின் இடம் பெற்ற இந்திய அணி நேரடியாக காலிறுதியில் பங்கேற்றது. இதில் பிரிட்டனை 239-232 என வீழ்த்தியது. அடுத்து நடந்த அரையிறுதியில் டென்மார்க்கை எதிர்கொண்டது.முதல் இரு சுற்று முடிவில் 115-118 என பின்தங்கிய இந்தியா, கடைசி நேரத்தில் சிறப்பாக செயல்பட 232-231 என 'திரில்' வெற்றி பெற்று, பைனலுக்குள் நுழைந்தது.பெண்கள் அபாரம்பெண்கள் பிரிவில் இந்தியாவின் மதுரா, ஜோதி, சிகிதா இடம் பெற்ற இந்திய அணி, காலிறுதியில் கஜகஸ்தானை 232-229 என வீழ்த்தியது.அடுத்து நடந்த அரையிறுதியில் இந்தியா, பிரிட்டன் மோதின. இதன் முதல் இரு சுற்று முடிவில் இந்திய அணி 115-118 என பின்தங்கியது. மூன்றாவது சுற்றில் எழுச்சி பெற, 174-174 என சமன் ஆனது. கடைசி சுற்றில் முந்திய (58-56) இந்திய அணி, முடிவில் 232-230 என வெற்றி பெற்று, பைனலுக்கு முன்னேறியது.
10-Apr-2025
28-Apr-2025