உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / ஆசிய அணியில் பவானி தேவி

ஆசிய அணியில் பவானி தேவி

புதுடில்லி: ஆசிய விளையாட்டில் பங்கேற்கும் வாள் சண்டை அணியில் தமிழகத்தின் பவானி தேவி இடம் பெற்றார்.ஜப்பானின் அச்சி-நகோயாவில் ஆசிய விளையாட்டு 20வது ஆசிய விளையாட்டு, வரும் 19 முதல் அக். 4 வரை நடக்க உள்ளது. 43 விளையாட்டில் 71 பிரிவுகளில் போட்டிகள் நடக்க உள்ளன. இந்தியா சார்பில் 35 விளையாட்டில் 265 வீரர், 227 வீராங்கனைகள் என 492 பேர் களமிறங்குகின்றனர். இதில் பங்கேற்கும் 20 பேர் கொண்ட இந்தியாவின் வாள் சண்டை அணி அறிவிக்கப்பட்டது. தமிழகத்தின் பவானி தேவி வழி நடத்தவுள்ளார். காமன்வெல்த் சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற தனிஷ்கா, கரண்சிங் குர்ஜார், வெண்கலம் கைப்பற்றிய பிராச்சி, தேஜஸ் உள்ளிட்டோரும் இடம் பெற்றனர். இன்று முதல் வரும் செப். 15 வரை, பாட்டியாலா தேசிய முகாமில் பயிற்சியில் ஈடுபட உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை