உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / மல்யுத்தம்: சுஜீத் கலக்கல்

மல்யுத்தம்: சுஜீத் கலக்கல்

நகோயா: ஆசிய விளையாட்டு ஆண்களுக்கான மல்யுத்தம் 65 கிலோ பிரிவில் இந்தியா சார்பில் சுஜீத் கல்கல் 23, பங்கேற்றார். முதல் சுற்றில் 13-3 என ஆப்கானிஸ்தானின் ஓமரை வீழ்த்தினார். காலிறுதியில் 10-0 என ஈரானின் அப்பாசை வென்றார். அரையிறுதியில், ஒலிம்பிக் சாம்பியன் ஜப்பானின் கொடாரோவை (3-3) சாய்த்தார். பைனலில் சுஜீத், தஜிகிஸ்தானின் அப்துல்மஜித் மோதினர். முதல் சுற்று முடிவில் 2-9 என சுஜீத் பின்தங்கி இருந்தார். பின் எழுச்சி பெற்ற இவர், அடுத்தடுத்து புள்ளிகளை குவித்தார். முடிவில், சுஜீத் 10-9 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றார். ஆசிய விளையாட்டில் இவர் வென்ற முதல் தங்கம் ஆனது.தொடரும் வெற்றிசர்வதேச மல்யுத்தத்தில் இந்தியாவின் சுஜீத், கடைசியாக 2025, உலக சாம்பியன்ஷிப்பில் (23 வயது) தோல்வியடைந்தார். இதன் பின், சர்வதேச அரங்கில் தொடர்ச்சியாக நேற்று, 24வது வெற்றியை பதிவு செய்தார். * பெண்களுக்கான 50 கிலோ பிரிவு வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இந்தியாவின் திபான்சி, 4-11 என கஜகஸ்தானின் ஜெய்னப்பிடம் தோல்வியடைந்தார். * 76 கிலோ பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் பிரியா, 1-6 என கஜகஸ்தானின் அய்பெரியிடம் தோல்வியடைந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ