உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / வெள்ளி வென்றார் நிஷ்சே * ஆசிய ஜூனியர் குண்டு எறிதலில்...

வெள்ளி வென்றார் நிஷ்சே * ஆசிய ஜூனியர் குண்டு எறிதலில்...

தம்மம்: ஆசிய சாம்பியன்ஷிப் (18 வயது) குண்டு எறிதலில் இந்தியாவின் நிஷ்சே வெள்ளி வென்றார்.சவுதி அரேபியாவில், 18 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய தடகள சாம்பியன்ஷிப் 6வது சீசன் நடக்கிறது. ஆண்களுக்கான குண்டு எறிதல் போட்டி நடந்தது. இந்தியா சார்பில் நிஷ்சே, ஆஹந்த் பிரதாப் சிங் பங்கேற்றனர். துவக்கத்தில் இருந்து சிறப்பாக செயல்பட்ட நிஷ்சே, ஐந்தாவது வாய்ப்பில் அதிகபட்சம் 19.59 மீ., துாரம் எறிந்து இரண்டாவது இடம் பிடித்து, வெள்ளி வென்றார். தவிர, இது இவரது சிறந்த செயல்பாடாக அமைந்தது. இத்தொடரில் இவர் கைப்பற்றிய இரண்டாவது பதக்கம் இது. சீனாவின் ஹன் குஜெங், 20.23 மீ., துாரம் எறிந்து ஆசிய சாம்பியன்ஷிப் சாதனையுடன் தங்கம் கைப்பற்றினார். சிங்கப்பூர் வீரர் அன்சன் (19.59) வெண்கலம் வசப்படுத்தினார். இந்தியாவின் மற்றொரு வீரர் பிரதாப் சிங் (18.17) 4வது இடம் பிடித்தார். இரண்டு வெண்கலம்பெண்களுக்கான வட்டு எறிதலில் இந்தியாவின் லக்சித்தா (41.30 மீ.,) வெண்கலம் கைப்பற்றினார். மா சென்யி (53.81, சீனா), ஜாவோ அன்கி (47.89, சீனா) தங்கம், வெள்ளி வென்றனர். பெண்களுக்கான 100 மீ., தடை ஓட்டத்தில் இந்தியாவின் சவுரியா (13.80 வினாடி) வெண்கலம் வசப்படுத்தினார். பெண்களுக்கான 200 மீ., ஓட்டத்தில் இந்தியாவின் ஆர்த்தி, 24.31 வினாடி நேரத்தில் கடந்து, வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார். ஐக்கிய அரபு எமிரேட்சின் மரியம் (23.99), ஜப்பானின் ஷிபாடா (24.16) முதல் இரு இடம் பிடித்தனர். இதுவரை இந்திய அணி 3 வெள்ளி, 5 வெண்கலம் என 8 பதக்கம் வென்றுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி